உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் தவறி விழுந்த, 'ஷூ'வை எடுத்து குழந்தையிடம், பரிவுடன் யானை ஒப்படைத்துள்ள சம்பவம் மற்றவர்களை வியப்படையச் செய்துள்ளது.
விலங்குகளின் நடவடிக்கைகளை சில வேளைகளில் மனிதர்களால், புரிந்துகொள்ள இயலாது. ஆனால், மனிதர்களின் தேவையை விலங்குகள் புரிந்துகொள்ளும் சூழ்நிலை கூட உருவாகும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
உயிரியல் பூங்கா
நம் அண்டை நாடான சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு சமீபத்தில் சென்ற ஒரு குடும்பத்தினருக்கு இந்த எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது. அந்த பூங்காவில் உள்ள யானைகளை, சற்று உயரமான மேடையில் இருந்து மட்டுமே பார்த்து ரசிக்க முடியும்.
தவறிவிழுந்த ஷூ
அவ்வாறு ரசித்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அணிந்திருந்த ஷூ, தவறுதலாக கீழே விழுந்துவிட்டது. ஷூவை இழந்த சிறுவன் அழுதான். அந்தக் கூண்டுக்குள் இருந்த யானை உற்று கவனித்தது.
யானையின் பரிவு
அடுத்த சில நொடிகைளில், உடனடியாக அந்த இடத்துக்கு வந்த அந்த யானை, அந்த ஷூவை எடுக்க முயன்றது. மிகவும் சிறிதாக இருந்ததால், மிகவும் சிரமப்பட்டு எடுத்தது. பின்னர், தன் தும்பிக்கையை நீட்டி, உயரமான மேடையில் இருந்த சிறுவனிடம் ஒப்படைத்தது. சிறுவனும் மகிழ்ச்சியில் அந்த யானைக்கு சிறிது புற்களை கொடுத்தான்.
வைரலாகும் வீடியோ
இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த யானையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளதாக பலரும் பதிவிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments