வாழ்க்கையின் கனவாகக் கருதும் திருமணம், குடும்பத்தினருக்கு கவுரவத்தைக் கொடுப்பதுடன், கடமையை முடித்துவிட்டோம் என்ற நிம்மதியைப் பெற்றோருக்கும், புதிய வாழ்வில் நுழையும் அங்கீகாரத்தை மணமக்களுக்கும் கொடுக்கிறது. அதனால், தனிநபர் வாழ்க்கையில் திருமணம் என்பது எப்போதுமே முக்கியமான நிகழ்வு.
எனவேதான்,திருமணம் விழா என்பது லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நடத்தப்படுகின்றன என்பதோடு, இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு கடுமையாக உழைத்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், சில சமயங்களில் ஏதேனும் சப்பைக் காரணங்களைக் கூறி திருமணத்தை நிறுத்திவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. அப்படி ஏதேனும் ஒரு காரணத்திற்காக கலயாணம் நின்று போனால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பொருள் இழப்பு ஏற்படுவதோடு, மிகுந்த மன வேதனைக்கும் உள்ளாகின்றனர். அப்படியொரு சம்பவம்தான் இங்கு நடந்திருக்கிறது.
தாமதமான விருந்து
பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தில் படுவானா என்னும் கிராமத்தில் ராஜ்குமார் என்ற இளைஞருக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமணம் நடைபெறும் இடத்திற்கு, தங்களது குடும்பத்தினருடன் மாப்பிள்ளை ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மணமகனின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு விருந்து அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மணமகன் ராஜ்குமாரும், அவரது குடுமபத்தினரும் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர்.
தடைபட்ட திருமணம்
இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைக்க, ஊர் மக்கள் பல முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மணமகன் அங்கிருந்து கோபமாக சென்று விட்ட நிலையில் திருமணமும் நின்று போனது. மணமகன் குடும்பத்தினரின் செயலால் பாதிக்கபட்ட மணப்பெணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் பற்றி, போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணமகனின் வீட்டார் திருமணத்தை நிறுத்த, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இரு தரப்பிற்கு இடையே நடந்த பஞ்சாயத்தில், வரதட்சணையாக தரப்பட்ட 25,000 ரூபாய் திருமண விருந்து சமைப்பதற்காக செலவான பணம், பெண் வீட்டாரிடம் இருந்து வாங்கிய பைக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், மணமகனின் குடும்பத்தினர், திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
Share your comments