லிக்விட் ஃபண்ட் (Liquid funds) என்பது ஒரு திறந்த நிலை குறுகிய கால டெட் மியூச்சுவல் ஃபண்ட் (open-ended debt mutual funds) வகையைச் சேர்ந்ததாகும். இந்த வகை ஃபண்டுகள் பொதுவாக வைப்புச் சான்றிதழ்கள் (certificates of deposit), வணிக ஆவணங்கள் (commercial papers), கருவூலப் பில்கள் (treasury bills), அழைப்புப் பணம் (call money) போன்ற பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
லிக்விட் ஃபண்ட் (Liquid funds)
எளிதாக பணமாக மாற்றக்கூடிய சந்தை அபாயங்கள் மிகவும் குறைந்த முதலீட்டுத் திட்டமாகும். பெரும்பாலான லிக்விட் ஃபண்டுகளில் வெளியேற்றக் கட்டணங்கள் இருப்பதில்லை. மேலும் எந்த நேரத்திலும் எவ்வித அபராதமும் செலுத்தாமல் நீங்கள் முதலீடு செய்த திட்டத்திலிருந்து வெளியேறலாம்.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
உங்களிடம் அதிகப்படியான பணம் இருந்தால் அதை எதில் முதலீடு செய்வது என்பது குறித்துத் தெரியவில்லையெனில் நீங்கள் உங்கள் பணத்தை அப்படியே இந்த லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வையுங்கள். பணத்தை என்ன செய்வது என்று நீங்கள் தீர்மானிக்கும் வரை உங்கள் பணத்தை சில நாட்கள் அல்லது சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு அதில் அப்படியே வைப்பு வைக்க முடியும். முதலீட்டாளர்கள் தங்கள் அவசர கால பணத்தை இந்த லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம்.
ஃபிக்சட் டெபாசிட், லிக்விட் ஃபண்டும் ஒரே மாதிரியானதா?
இதை நீங்கள் ஃபிக்ஸட் டெப்பாசிட்டுடன் ஒப்பீடு செய்வது சரியான ஒன்றாக இருக்காது. ஏனெனில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்தே உங்கள் பணத்தை நீங்கள் எடுக்க முடியும். மேலும் இவை சந்தை அபாயங்கள் மிகவும் குறைந்த ஒரு முதலீட்டுத் திட்டமாகும். அதுமட்டுமின்றி லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்தால் சராசரியாக 3.46% உறுதியான லாபத்தை நீங்கள் பெற முடியும்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
பான் கார்டில் திருத்தம் செய்வது உட்பட முக்கிய தகவல்கள் இதோ!
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பென்சன் தொகை உயர வாய்ப்பு!
Share your comments