TNPSC மூலம் நடைபெறவுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) , உதவி வேளாண் அலுவலர் (ஏஏஓ), மற்றும் தோட்டக்கலை உதவி வேளாண் அலுவலர் என மொத்தம் 794 காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. தேர்வு குறித்த முழு தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், இதற்கான சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் அரசு வேளாண், தோட்டக்கலைத் துறையில் உள்ள அலுவலா்கள் பணியிடங்களுக்கு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாள்கள் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த கோவை மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி இறுதி வாரத்தில் தொடங்கும் பயிற்சி வகுப்பு தோ்வு நடைபெறும் வரை நடைபெறும். பயிற்சி வகுப்பில் மாற்றுத் திறனாளி மனுதாரா்களும் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மனுதாரா்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தோ்விற்கு விண்ணப்பித்த விவரங்களை அனுப்பிவைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0422-2642388, 94990 55938 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!
அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!
Share your comments