சென்னையை சேர்ந்த இளம் ஜோடி, சற்று வித்தியாசமாக தண்ணீருக்கு திருமணம் செய்து,புதுமை படைத்தனர்.
திருமண வைபவம் (Wedding ceremony)
திருமணம் என்பது அனைவருக்குமே கனவாக இருக்கும். நம் திருமண வைபவத்தைப் பார்த்து மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஆனால் இந்த தம்பதி, தங்கள் திருமணத்தின் மூலம் மற்றவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்து புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த இளம் ஜோடி, கடந்த திங்கள்கிழமை அன்று தண்ணீருக்கு அடியில் திருமணம் செய்து கொண்டனர்.
மணமகன் கடந்த 16 ஆண்டுகளாக ஸ்கூபா டைவிங் செய்து வருகிறார். அதனால் தங்கள் திருமணத்தை நீருக்கு அடியில் செய்ய முடிவைடுத்ததுடன், திருமணத்திற்கு முன்பே மணமகளிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, அவருக்கும் முறையான பயிற்சிகள் அளித்துள்ளார்.
வித்தியாசமான திருமணம் (Strange marriage)
மணமகன் வி.சின்னத்துரையும், மணமகள் எஸ்.ஸ்வேதாவும் சுமார் 60 அடி நீருக்கு அடியில் திருமணம் செய்துகொண்டனர். மணமகள் சிவப்பு புடவையும், மணமகள் வேட்டி சட்டையும் அணிந்து இருந்தனர். திருமணத்திற்கு முன்பு அவர்கள் ஈரமான ஆடைகளில் மட்டுமே டைவிங் (Diving) செய்திருந்தனர். இது ஒரு பாரம்பரிய திருமண விழாவாக நீருக்கடியில் அமைந்தது. நாங்கள் காலையில் நல்ல நேரத்தில் நீராடி மாலைகளை எங்களுக்குள் மாற்றிக்கொண்டோம். பின்னர் நான் தாலிகட்டினேன் என்று கூறுகிறார் மென்பொருள் பொறியாளரான சின்னதுரை.
ஸ்கூபா டைவிங் (Scuba diving)
ஒரு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற பிறகு , சில ஸ்கூபா டைவிங்களை செய்த பின்பும் போதுமான அளவு நம்பிக்கையுடன் நான் இன்று திருமணத்தில் டைவிங்கை செய்தேன். முதல் முறை கடலின் அடி ஆழத்திற்குச் சென்ற போது மீன்கள் நீந்துவதை நான் எனக்கு மிகவும் அருகாமையில் கண்டேன். என் வாழ்நாளில் சிறந்த அனுபவமாக இதை நான் கருதுகிறேன் என்று மணமகள் ஸ்வேதா கூறியுள்ளார்.
இந்த விழாவை விவரிக்கும் மணமக்கள் நீருக்கடியில் திருமண சடங்குகளை முடிக்க 45 நிமிடங்கள் ஆனது என்றும், நீர் மாசுப்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே தனித்துவமான முறையில் நீருக்கடியில் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளனர்.மணமகனின் குடும்பத்தாரே இந்த நீருக்கடியில் திருமணத்தை நடத்த பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும் படிக்க...
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!
Share your comments