கஜா வாழ்வாதாரத் திட்டதின் கீழ், நடப்பாண்டிற்கான காய்கறி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயத்துள்ளது. அதன் படி திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் காய்கறிகளின் விதைகளான சின்ன வெங்காயம், புடலை, பீர்க்கன்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பாகற்காய் உள்ளிட்ட விதைகள் 100% மானியத்தில் வழங்க பட உள்ளது. இதன் மூலம் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பை உயர்த்த முடியும் என்று கூறியுள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் மட்டும் 56 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயித்திருப்பதால் ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். இதற்காக விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
Share your comments