இந்தியாவில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இமாச்சல பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
இந்தியாவில் அனைத்து மாநில அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த நிலையில் இமாச்சலப்பிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க ஊழியர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட இந்த காலக்கெடுவுக்குள் தனது ஓய்வூதிய விருப்பத்தை ஊழியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இல்லையெனில் அவர் தேசிய பென்ஷன் திட்டத்தில் கீழ் வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தெடுத்தால் ஊழியர் ஏப்ரல் மாதத்தில் தேசிய பென்ஷன் திட்டத்தின் பங்கை டெபாசிட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் அறிமுகம்!
EPFO அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
Share your comments