1. Blogs

மத்திய அரசு ஊழியாராக விருப்பமா? அழைக்கிறது அஞ்சல் துறை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Want to be a federal employee? Calling Post Office!
Credit : DNA India

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நம்பிக்கை நட்சத்திரம் (The star of hope)

கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது இந்திய அஞ்சலகம்தான். குறிப்பாகக் கிராம மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்துடன், அவர்களின் எதிர்காலக் கனவை நிறைவேற்றும் எந்திரமாகவும் திகழ்கிறது அஞ்சலகங்கள்.

இத்தனை அஞ்சல் துறையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்? என்று எண்ணுபவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.

மொத்தக் காலியிடங்கள் 

நிர்வாகம்  (Management)

இந்திய அஞ்சல் துறை

பணி

Assistan Manager - 23

பணி:

Technical Supervisor - 06

சம்பளம் (Salary)

மாதம் ரூ.9,300 - 34,800

கல்வித் தகுதி (Educational Qualification)

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age limit)

56 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

எழுத்துத் தேர்வு மற்றும் Deputation அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)


https://ccc.cept.gov.in/technicalpost என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி (Deadline)

5.12.21

மேலும் படிக்க...

லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

English Summary: Want to be a federal employee? Calling Post Office! Published on: 30 November 2021, 10:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.