தெற்கு ரயில்வேயில் உள்ளூர் ரயில் உதிரிப் பாகங்கள் (Spare parts) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மதுரை கோட்டத்தில் பண்டகசாலை திறக்கப்பட்டுள்ளது.
உதிரி பாகங்கள் தேவை
ரயில்வே துறையில் ரயில் பெட்டி, ரயில் என்ஜின் (Train engine) போன்றவற்றின் பராமரிப்பிற்குப் பல உதிரிப் பாகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த உதிரிப் பாகங்களை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பல உதிரி பாகங்களை விற்பனை செய்ய மிகக் குறைந்த அளவு நிறுவனங்களே உள்ளன. ரயில்வே துறைக்குத் தரமான உதிரிப் பாகங்களை வழங்கவும் அதிகமான உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்று வாய்ப்பு அளிக்கும் வகையிலும் ரயில்வே துறைக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள பண்டகப் பொருட்கள் (Commodities) காட்சியக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டக பொருள் காட்சி அரங்கு:
பண்டக பொருள் காட்சி அரங்கை 13ஆம் தேதி, அதாவது புதன் கிழமையன்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர் லெனின் (V.R. Lenin) துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித்குமார் மன்சுகானி, கோட்ட பண்டக மேலாளர் அவ்வாறு கிரண் குமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் (Spare parts Manufacturers) மற்றும் விற்பனையாளர்கள் ரயில் பெட்டி மற்றும் எஞ்சின் பராமரிப்பிற்க்குத் எந்தெந்த உதிரிப்பாகங்கள் தேவைப்படுகின்றன என்பதை இந்த காட்சியரங்கு வாயிலாக அறிந்து தங்கள் வர்த்தக வாய்ப்புகளை (Business Opportunities) அதிகரித்துக் கொள்ளலாம்.
காட்சி அரங்கு நேரம்
இந்த காட்சி அரங்கு அலுவலக வேலை நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!
வைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு! நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச Wi-Fi வசதி! டெல்லி முதல்வர் அசத்தல்!
Share your comments