தெருவில் சுற்றித்திரிந்த கங்காருவை மடக்கிப்பிடித்துக் கைது செய்து தங்கள் திறமைக் காட்டியுள்ளனர் அமெரிக்க போலீசார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கங்காரு ஒன்று, தெருக்களில் அங்கும் இங்கும் துள்ளி குதித்துத் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் ஜாக் என செல்லமாக அழைக்கப்படும் கங்காருவை, சுற்றி வளைத்தனர். பின்னர் லாவகமாகத் தங்களது வாகனத்தில் ஏற்றிப், போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்று ஐந்து நட்சத்திர ஓட்டல் அளவிற்கு உணவு வழங்கி உபசரித்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த உபசரிப்பால், கைதியான கங்காரு பின்னர் போலீசாரின் புதிய நண்பனாகவும் மாறிவிட்டது.
உரிமையாளர் குற்றச்சாட்டு (Owners Blame)
இந்நிலையில், தான் வீட்டுவேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது, திறந்திருந்த கேட் வழியாக வீட்டை விட்டு வெளியே கங்காரு ஓடி விட்டதாக ஜாக்கின் உரிமையாளரான அந்தோணி மாகியாஸ் கூறியுள்ளார்.
ஜாக் ஓய்வெடுக்கும் நேரத்தில் போலீசார் பாதுகாப்பாக கங்காருவைக் கைது செய்து, நகரை விட்டு வெளியே உள்ள பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர் என்றும் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப் பொருத்தவரை, வெளிநாடுகளை சேர்ந்த விலங்குகளுக்கு, லாடர்டேல் நகருக்குள் வளர்ப்பது சட்டவிரோதம் என்ற சட்டம் அமலில் உள்ளது.
காப்பகத்தில் ஒப்படைப்பு
இதனைக் கருத்தில் கொண்டு, முதலில் கைது செய்த போலீசார் பின்னர், நகருக்கு வெளியே உள்ள தெற்கு புளோரிடா விலங்குகள் காப்பகத்தில், கங்காருவை போலீசார் ஒப்படைத்தனர்.
கங்காருவை சிறையில் அடைந்த போலீசாரின் செயல், வனவிலங்கு ஆர்வலர்களை முதலில் அதிர்ச்சியடைச் செய்தது. எனினும் பின்னர் காப்பகத்தில் கங்காரு ஒப்படைக்கப்பட்டது அறிந்து சற்று ஆறுதல் அடைந்தனர். இருந்தாலும், இங்கு சட்டம் தன் கடமையைத்தானே செய்துள்ளது.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments