மரணத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வருவது என்றுக் கேள்விப்பட்டிருகிறோம் அல்லவா. அப்படியொரு நிகழ்வு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று, மீனவரை விழுங்கித்துப்பிய சம்பவம், மற்றவர்களுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்டு பிடிக்க (Catch the crab)
அமெரிக்காவின் மெசச்சுசஸ்ட் கடற்கரையில் மைக்கேல் பக்காடு என்கிற மீனவர், கடலின் ஆழத்தில் இருக்கும் நண்டைப் பிடிப்பதற்காகக் கடலில் குதித்துள்ளார்.
விழுங்கியத் திமிங்கலம் (Swallowed whale)
35 அடி ஆழத்திற்குச் சென்று நீந்திக் கொண்டிருந்த அவரை ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று எதிர்பாராவிதமாக விழுங்கியது.
30 விநாடிகள் (30 seconds)
30 விநாடிகள் திமிங்கலத்தின் இருட்டடித்த வாயில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நீந்திக் கொண்டிருந்த நிலையில் தனக்கே உரித்தான பாணியில் கடலுக்குமேலே எகிறிகுதித்த திமிங்கலம், அவரை காரித் துப்பியது. துப்பிய வேகத்தில் பறந்துபோய் கடலின் மேற்பரப்பில் விழுந்த மைக்கேல், பின்னர் கரைக்கு வந்து சேர்ந்தார்.
காயங்கள் இல்லை (No injuries)
இதனால் அவருக்கு எலும்பு முறிவோ, பெரிய காயங்களோ ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறிய காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கல ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகையில், பொதுவாக திமிங்கலங்கள் வாயை நன்றாக திறந்தபடி நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும். குழுவாக வரும் மீன்களை அப்படியே லபக் என்று கபளீகரம் செய்துவிடும்.
அதிர்ஷ்டவசமாகத் தப்பினார் (Luckily escaped)
இவ்வாறு திமிங்கலம் தனது உணவைத் தேடும். திமிங்கலம் சென்ற நேர்கோட்டில் மைக்கேல் சிக்கிக்கொண்டார். பிறகு திமிங்கலம் என்ன நினைத்ததோ, அதிர்ஷ்டவசமாக அவரைத் துப்பிவிட்டது எனக் கூறியுள்ளனர்.
கதை உண்மையானது (The story is real)
அமெரிக்காவில் குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதை ஒன்று உண்டு. பினோஜியோ என்ற அந்தக் கதையில் மீனவர் ஒருவரை பிரமாண்ட திமிங்கலம், விழுங்கி பின்னர் துப்பிவிடும். இந்தக்கதை தற்போது உண்மை சம்பவமாகியுள்ளது. இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!
Share your comments