உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் ஒரு சராசரி மனிதனுக்கு 6-8 மணிநேர தூக்கம் தேவை. உங்களுக்கு நல்ல தூக்கம் வராதபோது மூளை செயல்படுவது மிகவும் கடினமாகிவிடுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
ஆனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்காத ஒரு மனிதன் இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 1962 ஆம் ஆண்டு முதல் தூங்கவில்லை எனக் கூறும் வியட்நாமியரைப் பற்றிய யூடியூப் வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
தாய் என்கோக் என்ற 80 வயது முதியவர், பல தசாப்தங்களுக்கு முன்னர், சிறுவயதில் தனக்கு காய்ச்சல் வந்ததாகவும், அதன் பிறகு அவரால் மீண்டும் தூங்க முடியவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் அவரும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களைப் போல அமைதியான தூக்கத்தைப் பெற விரும்புகிறார். ஆனால் 1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சல் தனது தூக்கத்தை முழுமையாக பறித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட என்கோக்கின் குடும்பத்தினர் அவர் தூங்குவதைப் பார்த்ததில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பலர் என்கோக் இன் நிலையைப் பரிசோதிக்க முயன்றனர்.
இருப்பினும், அவர்களில் யாராலும் அவரது கூற்றுகளை மறுக்க முடியவில்லை. 80 வயதானவரின் நிலை தூக்கமின்மை என்றும், தூக்கமில்லாத இரவுகள் ஒரு நபரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அது அவரது உடல்நிலையை பாதிக்கவே இல்லை என்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்று. என்கோக் நல்ல உணவைப் பின்பற்றி ஆரோக்கியமாகவே இருக்கிறார்.
உகந்த ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்விற்காக, தூக்கம் என்பது ஒரு உயிரியல் செயல்முறையாகும். தூக்கத்துடன் தொடர்புடைய பல நன்மைகள் உள்ளன, இதில் மூளையின் செயல்பாடு, பசியின்மை கட்டுப்பாடு மற்றும் நோயெதிர்ப்பு, ஹார்மோன் மற்றும் இருதய அமைப்பு செயல்பாடு ஆகியவை அடங்கும்.
2010 இன் மதிப்பாய்வின்படி, ஒருவர் 264 மணிநேரம் அல்லது 11 நாட்களுக்கு மேல் தூங்காமல் இருந்ததுதான் தற்போதைய உலக சாதனை.
தூக்கமின்மை பரிசோதனையில், ராண்டி கார்ட்னர் என்று அழைக்கப்படும் கலிபோர்னியா உயர்நிலைப் பள்ளி மாணவரால் 1964 இல் 264 மணிநேரம் வரை தூங்காமல் இருக்க முடிந்தது.
மேலும் 11 நாட்களின் முடிவில் அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட கால உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள் ஏதுமின்றி அவர் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கத்தின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், அமெரிக்காவில் 70 மில்லியன் மக்களும் ஐரோப்பாவில் 45 மில்லியன் மக்களும் நாள்பட்ட தூக்கக் கலக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர், இது தினசரி செயல்படும் திறனையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது.
மூளை உட்பட உடல் முழுவதும் ஆரோக்கியமான உடலியக்கத்தை பராமரிக்க தூக்கம் அவசியம். தூக்க சிக்கல்கள் மிகவும் பொதுவானவை, தூக்கத்தின் காலம் மற்றும் தரம் ஆகிய இரண்டும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு மிகவும் அவசியமான ஒன்று.
மேலும் படிக்க
Share your comments