"மாப்பிள்ளை சம்பா" அல்லது “மாப்பிள்ளை அரிசி” என்றழைக்கப்படும் இவ்வகை நெல்ரகம் ஒரு பூர்வீக நெல்ரகம் ஆகும், இது சிவப்பு நிறத்தில் உள்ளது மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் விளைகிறது.
இது கரிம வேளாண்மைக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இது கடினமான தன்மையை கொண்ட நெல் ரகமாகும் மற்றும் உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடின்றி இவ்வகை நெற்பயிர்கள் வளரும் தன்மை கொண்டவையாகும். இது கடுமையான வெள்ளத்தையும் தாங்கும். மாப்பிள்ளை அரிசி களிமண் மற்றும் மணல் கலந்த களிமண் மண்ணில் பயிரிடப்பட்டால் நன்றாக இருக்கும். பயிர் காலம் பெரும்பாலும் 160 நாட்கள், இந்த நெல்வகை சுமார் 120 செமீ உயரம் கொண்டது. இவ்வகை நெற்பயிர்கள் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை பயிரிடப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, மற்ற நாட்டு அரிசி வகைகளுடன், மாப்பிள்ளை சம்பாவும் நமது பண்ணைகள் மற்றும் சந்தைகளில் இருந்து மறைந்து, அதற்கு பதிலாக அதிக பதப்படுத்தப்பட்ட, ஊட்டச்சத்து குறைந்த வெள்ளை அரிசிக்கு வழிவகை செய்கிறது. மிகவும் ஆர்வமுள்ள பாரம்பரிய விவசாயிகள் இப்போதும் அத்தகைய அரிசியை பயிரிட்டு வருகின்றனர். இந்த அரிசி தமிழகத்தின் திருவண்ணாமலையில் இருந்து அதிகம் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வகை நெல்ரகங்களின் குறிப்புக்களை தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் பல தமிழ் நாட்டுபுற பாடல்களின் வழி நாம் அறிந்துகொள்ளலாம்.
பெயர்க்காரணம்:
பண்டைய தமிழகத்தில், ஒரு மனிதன் பல பாரம்பரிய வீர விளையாட்டுகள் மூலம் தனது துணிச்சல் மற்றும் பலத்தை காட்டுவது உண்டு. இவ்வாறான வீரவிளையாட்டுகள் ஒரு ஆண்மகனின் உடல் மற்றும் மன வலிமையை சோதிக்க நடத்தப்படுகிறது. அத்தகைய ஒரு வீரவிளையாட்டு கனமான பாறையைத் தூக்குவதாகும், அதில் திருமணமான ஆண்மகனை தனது உடல் சக்தியைக் காட்ட அனைவருக்கும் முன்னால் பாறையைத் தூக்கும்படி மணமகளின் வீட்டார் கேட்பதுண்டு. மருமகனின் ஆற்றலையும் பலத்தையும் அதிகரிப்பதற்காக மற்றும் பாறையை வெற்றிகரமாக உயர்த்துவதற்காக, அவரது மாமியார் அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள அரிசியை சமைத்து பறிமாறுவார்கள். மாப்பிள்ளை சம்பா என்பது அத்தகைய நாட்டு அரிசியாகும், இது அதிக ஊட்டச்சத்து மதிப்பைப் பெற்றுள்ளது, இது பாறையைத் தூக்கும் போது கவனம் செலுத்த உதவுகிறது மற்றும் தூக்கும் சக்தியை அளிக்கிறது என்பது குறிப்பு. எனவே, இந்த சிவப்பு தடிமனான அரிசிக்கு "மாப்பிள்ளை சம்பா" என்று பெயர் வந்தது, மேலும் இது பெரும்பாலும் புதுமண மணமகன்களுக்கு சமைத்து பரிமாறப்படுகிறது.
மற்றும் சங்க காலத்தில் மன்னர்கள் தங்களுடைய விருந்தினர்களுக்கு அரைவேக்காடு மாப்பிள்ளை சாம்பாரிசியை பரிமாறுவது அன்றைய வழக்கமாக இருந்தது.
அரிசியின் பெயர் “மாப்பிள்ளை சம்பா” என்றாலும், நல்ல ஆற்றலையும் வலிமையையும் பெற விரும்பும் அனைவருக்கும் இது உதவும் என்பதே உண்மை ஆகும்.
நன்மைகள்:
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு (iron) மற்றும் துத்தநாகம்(zinc) அதிகமாக உள்ளது. மயோகுளோபின் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்பு பங்களிக்கிறது. மயோகுளோபின் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவை ஆக்சிஜனை தசைகள் மற்றும் திசுக்களுக்கு வழங்கி உடலை அதிக ஆற்றல் மட்டத்தில் வைத்திருக்கின்றன. கொலஸ்ட்ரால் மற்றும் ஹைப்பர் கிளைசீமியாவைக் குறைக்க உதவும் புரோ-ஆந்தோசயினின்களும் இதில் உள்ளன. அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டினால் , இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது .
மாப்பிளை சம்பாவின் கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது வளர்சிதை மாற்றத்திற்கு எளிதானது. இந்த அரிசியில் சோடியம் குறைவாக இருப்பதால், இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. மாப்பிள்ளை சம்பா அரிசியில் சத்துக்கள் நிறைந்துள்ளன மருத்துவப் பயன்கள் பலவும் உள்ளன. இந்த அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும், வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் புண்கள் உள்ளிட்ட குடல் பிரச்சனைகளைத் தடுக்கவும் இது உதகிவுகிறது. அரிசியில் உள்ள வைட்டமின் பி1 வயிறு மற்றும் வாய் புண்களை குணப்படுத்த உதவுகிறது. அனைத்து வயதினருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க:
நீண்ட ஆயுளை கொடுக்கும் நம் பாரம்பரிய அரிசி! கொலஸ்ட்ராலை குறைக்கும் கார் அரிசி
Share your comments