தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (EPFO) தொழிலாளர் பென்சன் திட்டம் (Employees Pension Scheme) 1995ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. PF கணக்கு தொடங்க தகுதியானவர்கள் அனைவருமே தொழிலாளர் பென்சன் திட்டத்துக்கு தகுதியானவர்கள் தான்.
EPFO பென்சன் (EPFO Pension)
தொழிலாளர் பென்சன் திட்டத்தில், பணி ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் கிடைப்பது மட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் கணவன்/மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் பென்சன் கிடைக்கும். இவ்வகையில், தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஓய்வூதியதாரர் இறந்தபின் அவரது குடும்பத்தினர் குறிப்பிட்ட சில ஆவணங்களுடன், கடிதம் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என EPFO விதிமுறைகள் கூறுகின்றன. அவ்வகையில், என்னென்ன ஆவணங்கள் தேவை?
- ஓய்வூதியதாரரின் இறப்புச் சான்றிதழ்.
- பயனாளிகளின் (குடும்பத்தினர்) ஆதார் கார்டு நகல்.
- பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள்.
- பயனாளிகளின் வங்கி பாஸ்புக் அல்லது ரத்தான காசோலை (cancelled cheque)
- பயனாளிகளில் 18 வயதுக்கு கீழானவர்கள் இருந்தால் வயது சான்றிதழ்
75% பென்சன் (75% Pension)
EPFO விதிமுறைப்படி, ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரின் கணவன் அல்லது மனைவிக்கு பென்சன் தொகையில் 75% ஓய்வூதியமாக கிடைக்கும். குறைந்தபட்சம் மாதம் 750 ரூபாய் வழங்கப்படும். தாய், தந்தை இருவரும் இல்லாத பிள்ளைகளுக்கு 25 வயது வரை பென்சன் வழங்கப்படும். தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும்.
மேலும் படிக்க
உங்களிடம் ஜன் தன் யோஜனா கணக்கு இருக்கா? 10,000 ரூபாய் கிடைக்கும்!
Share your comments