ஒரே வாட்ஸ் அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பயனர்கள் இப்போது ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் தங்கள் WhatsApp கணக்கைப் பயன்படுத்தலாம்.
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "இன்று முதல், நீங்கள் நான்கு தொலைபேசிகளில் ஒரே வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழையலாம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கைப்பற்றியதன் மூலம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் செயலி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேடஸினை (whatsup status) தங்கள் பேஸ்புக் Story-ல் தானாக இடுகையிட அனுமதித்தது.
இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு தனியுரிமை பார்வையாளர் தேர்வினை கொண்டு வந்தது. இது மூலம் யார் தங்களது ஸ்டேடஸ் பார்க்கலாம், பார்க்க வேண்டாம் எனத் தீர்மானிக்கும் உரிமையை பயனர்களுக்கு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ஒரே நேரத்தில் நான்கு தொலைபேசிகளில் ஒரே வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழையலாம் என்பதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அம்சம் பயனர்கள் ஒவ்வொரு சாதனத்திலும் வாட்ஸ்அப் அக்கௌவுண்டினை இணைக்க அனுமதிக்கும் என்றும், செய்திகள், மீடியா மற்றும் அழைப்புகளின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (end-to-end encryption) உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
முதன்மையாக பயன்படுத்தும் போனில் நீண்ட காலத்திற்கு வாட்ஸ் அப் செயலற்ற நிலையில் இருந்தால், WhatsApp பயனரின் கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து துணை சாதனங்களும் (கணினி, மொபைல்) தானாகவே வெளியேறும் வகையில் இருந்தது. தற்போது 4 போன்கள் வரை பயனர்கள் அக்கௌவுண்டில் இணையலாம் என்பதால் செய்தி அனுப்புவதை மிகவும் வசதியாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லாக் அவுட் செய்யாமலேயே சாதனங்களுக்கு இடையில் மாற அனுமதிக்கிறது மற்றும் அவர்கள் நிறுத்திய இடத்திலிருந்து அரட்டைகளை(chat) மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது என்று WhatsApp பரிந்துரைத்துள்ளது.
மெசேஜிங் தளமானது துணை சாதனங்களை இணைக்க ஒரு ‘மாற்று மற்றும் அணுகக்கூடிய’ செயல்முறையை அறிவித்துள்ள நிலையில் புதிய அம்சம் உலகளவில் வெளியிடப்பட்டு இன்னும் சில வாரங்களில் உலகில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, WhatsApp Web பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை உள்ளிடுவதற்கு ஒரு முறை குறியீட்டைப் பெற (one Time code) அனுமதிக்கிறது. சாதனத்தை இணைப்பதைச் செயல்படுத்த இந்தக் குறியீட்டை அவர்களின் மொபைலில் உள்ளீடு செய்தால் போதும்.
pic courtesy : EPA/krishiJagran
மேலும் காண்க:
காட்டுப்பூனையை கொல்லும் குழந்தைகளுக்கு பரிசு- எதிர்ப்புகளால் போட்டி ரத்து!
Share your comments