சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் (Fixed Deposit) முதலீடு செய்கின்றனர். காரணம், ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் போடும் பணம் பாதுகாப்பாக இருக்கும். எந்தவொரு ரிஸ்க்கும் கிடையாது. சொல்லப்பட்ட வட்டி விகிதத்தில் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.
அதிக வட்டி எந்த வங்கியில் கிடைக்கும் என்பதை பார்த்து ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும். அதிக வட்டி எனில் அதிக வருமானம். அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தியதால் பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தி வருகின்றன.
அதிக வட்டி தரும் வங்கிகள் (Banks that offer high interest rates)
சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக வட்டி வழங்கும் வங்கிகளை பார்க்கலாம்.
- உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Ujjivan small finance bank) - 7.80%
- உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh small finance bank) - 7.75%
- சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Suryoday small finance bank) - 7.99%
- ESAF ஸ்மால் பைனான்ஸ் வங்கி (ESAF small finance bank) - 7.75%
- ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Fincare small finance bank) - 7.50%
- எக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Equitas small finance bank) - 7.50%
- ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி (AU small finance bank) - 7.40%
சீனியர் சிட்டிசன்கள், மேற்கண்ட வங்கிகளில் எதில் சிறந்த வட்டி கிடைக்கும் என்பதை முடிவு செய்து, முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க
Post Office: மாதந்தோறும் வருமானம் கிடைக்க சிறப்பான அஞ்சலக திட்டம்!
Share your comments