1. Blogs

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Will the old pension scheme come into effect

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்ப்பித்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது, தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் அரசு ஊழியர்களிடத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension scheme)

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியமும் பணிக்கொடை போன்ற பயன்களும் அளிக்கப்பட்டன. 2004 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தப் பயன்கள் நிறுத்தப்பட்டன. எந்தவொரு ஊழியருக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அரசுகளே அந்தப் பொறுப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வது, தனியார் துறையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலையை எளிதில் உருவாக்கிவிடும். பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமின்றி, அடுத்து வரும் ஆண்டில் புதிதாக ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களும் முடிந்துவிட்டதால், உடனடி அழுத்தங்கள் எதுவும் இல்லை என்றபோதும், ராஜஸ்தானின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிலும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

மேலும் படிக்க

PF பயனர்கள் கவனத்திற்கு: ரூ.7 லட்சம் வரையிலான காப்பீடு உங்களுக்குத் தான்

பென்சன் திட்டத்தில் புதிய வசதி: நீங்கள் நினைத்தால் தானம் அளிக்கலாம்!

English Summary: Will the old pension scheme come into effect? Government employees expect! Published on: 10 March 2022, 02:53 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.