1. Blogs

10 நிமிடத்தில் மது டெலிவரி- குடிமகன்களுக்கு குஷி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Wine Delivery in 10 Minutes- Kushi for Citizens!

மதுப்பிரியர்களைக் கவரும் வகையில், பத்தே நிமிடங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் வசதியை ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் புதிய யுக்தி, குடிமகன்களை குஷிமழையில் நனைய வைத்துள்ளது.

மதுபானம் உடல் நலத்திற்கு கேடு என்பதை, எத்தனை வகையில் அறிவுறுத்தினாலும், குடிமகன்கள் காதில் அது ஏனோக் கேட்பதே இல்லை.
இது ஒருபுறம் இருக்கக் குறைந்த விலையில் சரக்குகளை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள், அவ்வப்போது தாய்குலங்களின் கண்டனங்களையும் பெறாமல் இல்லை.

10 நிமிடத்தில்

இந்நிலையில், குடிமகன்களை குஷிப்படுத்தும் வகையில் வெறும் 10 நிமிடங்களில் மதுபானம் டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி செய்வதற்கே சராசரியாக 30 நிமிடத்துக்கு மேல் ஆகும் நிலையில், 10 நிமிடத்தில் மது டெலிவரி என்பதால் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இன்னோவெண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் பூஸி (Boozie) பிராண்டு வாயிலாக 10 நிமிடத்தில் மதுபானங்களை டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே சில நிறுவனங்கள் மதுபான டெலிவரி செய்து வந்தாலும், 10 நிமிட டெலிவரி என்பதுதான் இதன் ஹைலைட்.

பூஸியின் 10 நிமிட மதுபான டெலிவரிக்கு மேற்கு வங்க அரசும் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பூஸியில் மதுபானம் ஆர்டர் செய்தால் அருகில் உள்ள மதுக்கடையில் இருந்து மதுபானம் வாங்கிவரப்பட்டு வாடிக்கையாளரிடம் 10 நிமிடத்துக்குள் டெலிவரி செய்யப்படும். வாடிக்கையாளரின் நடவடிக்கைகள், ஆர்டர் செய்யும் போக்கு ஆகியவற்றை கண்காணிக்க பூஸி ஆப்பில் ஏஐ அம்சங்களும் உள்ளன. குறைந்த செலவில் டெலிவரி செய்வதற்கும் பூஸி வழிவகைகளை செய்துவிட்டது.

இதுபோக, வயது வராதவர்களுக்கு மதுபானங்களை தவிர்ப்பது, கலப்படம், அளவுக்கு மிஞ்சிய மது அருந்துதல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் பூஸி ஆப்பில் வசதிகள் உள்ளன.

மேலும் படிக்க...

ஐஸ் வாட்டர் Vs மண்பானைத் தண்ணீர், எதில் பக்கவிளைவுகள்?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

English Summary: Wine Delivery in 10 Minutes- Kushi for Citizens! Published on: 04 June 2022, 11:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.