ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலக சீனியர் சிட்டிசன் தினம் (World Senior Citizen) கொண்டாடப்படுகிறது. சமூகத்துக்கு சீனியர் சிட்டிசன்கள் ஆற்றியுள்ள பங்கை போற்றும் வகையில் சீனியர் சிட்டிசன் தினம் கொண்டாடப்படுகிறது.
சீனியர் சிட்டிசன் தினம் (Senior Citizens Day)
சீனியர் சிட்டிசன்கள் என்பவர்கள் சமூகத்துக்கு பெரும்பங்கு அளித்தவர்கள் மட்டுமல்லாமல், வளமான அனுபவம் பெற்றவர்கள். சீனியர் சிட்டிசன்களை போற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.
சீனியர் சிட்டிசன்களின் நலன் கருதி சிறப்புத் திட்டங்கள், வருமான வரி சலுகைகள், அதிக வட்டி வருமானம் என பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
உலக சீனியர் சிட்டிசன் தினத்தின் வரலாறு
1988ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் உலக சீனியர் சிட்டிசன் தினத்தை அறிவித்தார். இதுகுறித்து அதிபர் ரொனால்ட் ரீகன் வெளியிட்ட பிரகடனத்தில், அமெரிக்க குடும்பங்களில் சீனியர் சிட்டிசன்கள் அளித்த பங்களிப்பு மற்றும் சாதனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
உலகளவில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆனுக்குள் 150 கோடியை எட்டும் என ஐநா கணித்துள்ளது. எனவே, அதற்குள் சீனியர் சிட்டிசன்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பு தேவை என வலியுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு ரயிலில் சலுகை: பார்லிமென்ட் குழு பரிந்துரை!
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் இனி சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம் தான்!
Share your comments