ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வடிக்கையாளர்கள் டெபிட் கார்டு (Debit card) இல்லாமல் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ டெபிட் கார்டு இல்லாதபோதும் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி எஸ்பிஐ ஏடிஎம்களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ யோனோ ஆப்
இந்த வசதியை பெற எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர் தங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு போனில் எஸ்பிஐ யோனோ ஆப்பை (SBI YoNo App) பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இந்த ஆப்பை பயன்படுத்தியே இந்த எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துள்ள எஸ்பிஐ யோனோ ஆப்-ல், தங்களது சுய மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவுசெய்து உள்நுழைந்து ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் (Password) உருவாக்க வேண்டும். இந்த ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தியோ அல்லது எஸ்பிஐ நெட்பேங்கைப் பயன்படுத்தியோ யோனோ பயன்பாட்டில் உள்நுழைய முடியும். அதன்பிறகு, 6 இலக்க எம்.பி.ஐ.என் (MPIN) அமைக்க முடியும். இந்த பின் எதிர்காலத்தில் இந்த ஆப்-ல் எளிதாக உள்நுழைய பயன்படுத்தப்படலாம்.
பணம் எடுக்கும் முறை:
எஸ்பிஐ யோனோ பயன்பாட்டில் உள்நுழைந்த பிறகு, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் யோனோ பணத்தைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஏடிஎம் மையத்திற்கு சென்று நீங்கள் ஏடிஎம்மில் இருந்து எடுக்க விரும்பும் தொகையை உள்ளிடவும். அதன்பிறகு எஸ்பிஐ கணக்கில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ யோனோ பண பரிவர்த்தனைக்கான எண்ணை (PIN) எஸ்பிஐ அனுப்பும். எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் இந்த எண்ணையும், எஸ்பிஐ-யின் யோனோ கேஷ் பாயிண்டுகளில் உள்ளீடு செய்து பயன்படுத்த வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்படும் எஸ்பிஐ யோனோ ரொக்க பரிவர்த்தனை எண் நான்கு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.
எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் எஸ்பிஐ ஏடிஎம்-களில், ஏடிஎம்மின் முதல் பக்கத்தில் ‘கார்டு-குறைவான பரிவர்த்தனை’ விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும், பின்னர் யோனோ கேஷுக்கு சென்று விவரங்களை உள்ளிட வேண்டும். எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அருகிலுள்ள யோனோ பணப் புள்ளிகளைக் கண்டறியும் வாய்ப்பையும் யோனோ பயன்பாடு வழங்குகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஐ.நா. அமைதிக் குழுவுக்கு 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்குகிறது இந்தியா!
கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!
Share your comments