1. Blogs

கூலித்தொழிலாளியா நீங்கள் ? இந்தத்திட்டத்தில் சேர்ந்தால், மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
you will get a pension of Rs.3000 per month!
Credit : The Wall street Journal

இளமைக்காலம் இன்னல் இல்லாமல் இருக்க கடினமாக உழைக்கும் மக்கள், ஓய்வு காலத்தில் நிம்மதியாக இருக்க முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

கவுரவமாக வாழ (Live with dignity)

ஏனெனில், உயிர் உள்ளவரை யாரிடமும் யாசிக்காமல் கவுரவமாக வாழ இந்த ஓய்வூதியம் நமக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

ஓய்வூதியத்திட்டம் (Pension Scheme)

அரசு ஊழியர்கள் மட்டும்தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்றில்லை. ஏன், கூலி வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என உழைக்கும் அடித்தட்டுமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் திட்டம் 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

10 கோடி பேர் இலக்கு (10 crore target)

இத்திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி அமைப்பு சாராத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் (pradhan mantri shram yogi mandhan yojana) திட்டத்தின் கீழ் வீட்டுத் வேலை செய்பவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் மற்றும் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு 60 வயதிலிருந்து மாதந்தோறும் ரூ .3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்களிப்பு (Contribution of the Central Government)

18 முதல் 40 வயதுவரை உள்ள மாதம் ரூ.15,000-க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். பயனாளர்களின் ஓய்வுக்கு பிறகான வருவாய்க்கு மத்திய அரசு போதிய பங்களிப்பை அளிக்கிறது.

மாத சந்தா ரூ.55 (Monthly subscription is Rs.55)

18 வயதுடைய நபர் இத்திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.55 மாத சந்தாவாக செலுத்தினால், 60 வயதிற்குப் பிறகு அவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

44 லட்சம் பயனாளிகள் (44 lakh beneficiaries)

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பயனாளிகள் எண்ணிக்கை 44,94,864 ஆக உயர்ந்துள்ளது.

பயனாளிகள் குறைவு (Beneficiaries are low)

இது குறித்து எக்ஸ்.எல்.ஆர்.ஐ. பேராசிரியர் சியாம் சுந்தர் கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் குறைந்த பயனாளிகளே உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் போதிய மாத ஓய்வூதியம் வழங்கப்படாது என்ற நம்பிக்கையின்மை நிலவுவதால், அதிக பயனாளிகள் இணையவில்லை.

இதேபோன்று, 2019 ம் ஆண்ட ஜூலை முதல் கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி லாகு வியாபரி மன்-தன் யோஜனா (pradhan mantri laghu vyapari mandhan yojana scheme) திட்டத்திலும் குறைந்த அளவிலான பயனாளிகளே உள்ளனர். இதுவரை 43,751 பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.

இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண்டு வருவாய் ரூ .1.5 கோடிக்கு மிகாமல் இருக்கும் சிறு வணிகர்கள், சில்லறை வர்த்தகர்கள், மற்றும் சுயதொழில் செய்பவர்கள் சேரலாம். அவர்களின் வயது வரம்பு 18-40க்குள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

தினமும் ரூ.3.50 சேமிக்க உதவும் திட்டம் எது தெரியுமா? முழுவிபரம் உள்ளே!

லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

English Summary: you will get a pension of Rs.3000 per month! Published on: 05 April 2021, 10:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.