தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து ஒரே மாதத்தில் 5.96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. இதற்காக 1,234 கோடி ரூபாய் பட்டுவாடா செய்துள்ளது.
நெல் கொள்முதல் (Purchase of paddy)
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன.
இதற்காக நெல் வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய - மாநில அரசுகளின் சார்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கிய நடப்பு கொள்முதல் சீசன் 2022 செப் மாதம் முடிவடைகிறது.
5.96 லட்சம் டன் (5.96 lakh tonnes)
இந்த சீசனில் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 958 கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. அக்டோபர் மாதம் மட்டும் 86 ஆயிரத்து 178 விவசாயிகளிடம் இருந்து 5.96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அவர்களின் வங்கிக்கணக்குகளில் 1,234 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு
இது குறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழையில் நனையாதபடி விரைந்து கொள்முதல் செய்ய, வாணிப கழக மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நிலங்களுக்கு அருகிலேயே, நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
நெல் வழங்க ஆர்வம் (Interested in providing paddy)
இடைத்தரகர்கள், வியாபாரிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதுடன், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணமும், உடனுக்குடன் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இதனால், விவசாயிகள், அரசிடம் நெல் வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments