விவசாயத்தில் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மும்மடங்கு வருமானத்தைப் பெற, மத்திய அரசின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணையுமாறு கோவை மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு மானியம் (Federal government subsidy)
விவசாயத்திற்கு இன்றியமையாதவற்றுள் நீர் முக்கியமானது. அதனால்தான் விவசாயிகள் நிதிச்சுமையைப் போக்க ஏதுவாக நீர்பாசனத்திற்கு 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மானியம் வழங்கி உதவி வருகிறது மத்திய அரசு.
இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
100% மானியம் (100% subsidy)
மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேரும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
ரூ.1.13 லட்சம் (Rs.1.13 lakhs)
இதன்படி இரண்டரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு, 1.13 லட்சம் ரூபாயும், இரண்டு ஏக்கர் உள்ளவர்களுக்கு, 89,682 ரூபாயும், ஒரு ஏக்கர் உள்ள விவசாயிகளுக்கு, 42,781 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.
பல வகை மானியம் (Multiple type grant)
மோட்டார் வாங்க, 15 ஆயிரம் ரூபாயும், தொட்டி கட்ட, 40 ஆயிரம் ரூபாயும், குழாய்கள் வாங்க, 10 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.
முன்பதிவு (Registration)
இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள், சூலுார் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!
Share your comments