உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், ஐ.சி.ஏ.ஆர்., (ICAR) எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.வி.ஆர்., எனப்படும் இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.அந்த ஆராய்ச்சியின் முடிவில் தக்காளி மற்றும் கத்தரிக்காய்களை ஒரே செடியில் வளர்க்கும் நுட்பத்தை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். அந்த செடிக்கு, 'பிரிமாட்டோ' என பெயரிடப்பட்டுள்ளது.
பிரிமாட்டோ
ஒரு செடியின் பாகத்தை மற்றொரு செடியின் தண்டில் இணைத்து வளர்க்கப்படும் முறை வாயிலாக, இந்த புதிய செடி வளர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிரிமாட்டோ செடியில் 3 - 4 கிலோ கத்தரிக்காய் மற்றும் 2 - 3 கிலோ தக்காளிகள் வரை காய்க்கும் என, ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து, ஐ.ஐ.வி.ஆர்., நிறுவன இயக்குனர் டாக்டர் பெஹேரா கூறியதாவது: ஒரே தாவரத்தில் இருந்து இரண்டு விதமான காய்கறிகளை உற்பத்தி செய்யும் இந்த புதிய முறை, சராசரி செடி வளர்ப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். சிறிய இடங்களில் இந்த செடியை எளிதில் வளர்க்கலாம். இதற்கு முன்பு வரை, பழங்கள் (Fruits) மற்றும் பூக்களுடன் (Flowers) இந்த முறை நிறுத்திக் கொள்ளப்பட்டது.
விலை
தற்போது, காய்கறி உற்பத்தியிலும் இது பின்பற்றப்படுகிறது. இதனால் செலவுகள் குறையும்; பயிர்களில் ரசாயன இருப்பும் குறையும். இந்த பிரிமாட்டோ செடியின் விலை 45 ரூபாயாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல விதமான செடிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் படிக்க
வெப்பநிலை மாற்றத்தால் இந்தியாவில் பாதிப்பு: ஆய்வில் தகவல்!
பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிக்கும் முறைகள்!
Share your comments