உடலுக்கு மிகுந்த சத்துக்களை வழங்கும் கீரைகள் உணவுப் பொருட்களில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளைக் கட்டாயம் உண்ணுதல் வேண்டும். இவற்றில் கீரை வகைகளும் அடங்கும். இந்நிலையில் இந்த கீரை வகைகளில் ஒன்றான தண்டுக்கீரை சாகுபடியைக் குறித்து இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!
கீரைகள் பொதுவாக நல்ல சூரியவொளியில் வளரக் கூடியவையாகும். 25-30 செல்சியஸ் வரையில் இருந்தால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். கீரைகளைப் பொதுவாக வெப்பப் பகுதி மற்றும் குளிர்ச்சியான பகுதியில் பயிரிடலாம். பொதுவாக ஒரு ஹெக்டேருக்குப் பயிரிட வேண்டும் என்றால் 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
மேலும் படிக்க: வெறும் ரூ.1000 போதும்! 1 கோடி ரூபாய் பெறும் திட்டம்!
கீரை சாகுபடிக்கு நிலம் தயாரித்தல் என எடுத்துக்கொண்டால், கல்லோ கட்டியோ இல்லாமல் இருக்கக் கூடிய நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டுக்கு ஒன்றரை மீட்டர் அளவு இடைவெளியில் விதைத்தல் வேண்டும். விதையினை இட்ட பின்பும், விதைப்பதற்கு முன்பும் நீரைச் சீராகப் பாய்ச்ச வேண்டும். கீரைக்கு உரமிட்டுப் பராமரிக்கையில், எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 2 கிலோ அசோஸ்பயிரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவைக் கொண்டு பயன்படுத்த வேண்டும். 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்தினையும் அடியுரமாக இடலாம் எனக் கூறப்படுகிறது.
கீரையில் வரும் நோய்களாக, இலைத்தின்னிப் புழு, இலைப்புள்ளி நோய் ஆகியன இருக்கின்றன. இதில் இலைத் தின்னிப் புழு என்பது கீரையின் இலைகளை அதிகமாகத் தாக்குகிறது. அவ்வாறு இருக்கையில் எக்டருக்கு 75 கிராம் வீதம் நவலூரான் 10 இ.சி. மருந்தினைத் தெளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுவே, இலைப்புள்ளி நோய் ஏற்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பெண்டாசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். சல்பர் கலந்த மருந்தினைத் தெளிக்கக் கூடாது எனக்கூறப்படுகிறது.
அரைக்கீரையினை 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ. உயரம் வந்ததும் கிள்ளி எடுத்துப் பயன்படுத்தலாம். அதன் பின்பு 7 நாட்கள் விட்டு விட்டு 10 முறை அறுவடை செய்யலாம். இதுவே, முளைக்கீரை என்றால் 21 முதல் 25 நாட்களில் வேருடன் பறிக்கலாம். தண்டுக்கீரையினை 35 முதல் 40 வேருடன் பறிக்கலாம். விதைக் கீரையினை 25 நாட்களில் பறிக்கலாம். அதுவே, 90 முதல் 100 நாட்கள் விட்டால் 2 முதல் 4 டன் விதைகள் கிடைக்கும்.
மேலும் படிக்க
ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!
Share your comments