1. விவசாய தகவல்கள்

42 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் நிதி கிடைப்பதில் சிக்கல்-பெறுவது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
42 lakh farmers do not get PM's Kisan fund - How to get it?

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 42 லட்சம் பேருக்கு 6-வது தவணைத்தொகை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம்

பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டது.

42லட்சம் விவசாயிகள் (42 lakh farmers)

ஆனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் 6வது தவணைத்தொகையை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிபரங்களின் படி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 42 லட்சம் விவசாயிகளுக்கு 6-வது தவணை சென்றடைய வில்லை.

இதேபோல் மத்திய பிரதேசத்தில் பதிவு செய்திருந்த விவசாயிகளில் 13 சதவீதத்தினருக்கு மட்டுமே தவணைத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விண்ணப்பப்படிவத்தில் செய்துள்ள சிறு பிழை காரணமாக, ராஜஸ்தான், பீகார், ஹரியானா, மகாராஷ்ராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும், இந்த நிதியுதவி கிடைக்கவில்லை.

என்ன காரணம்? ( What Reason)

விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பெயர், அவர்களது வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயரோடு ஒத்துப்போகவில்லை (பிழை திருத்தம்.  இத்தகைய தவறுகள், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேச விவசாயிகளின் விண்ணப்பங்களில் நிகழ்ந்துள்ளன.

செய்ய வேண்டியது என்ன? (What to do)

இத்தகைய தவறு உங்கள் விண்ணப்பத்திலும் நிகழ்ந்திருந்தால், உங்கள் செல்போனில், பிஎம் கிசான் ஆப்பை (PM Kisan app) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பிழைத் திருத்துவது எப்படி? (Correction)

அந்த ஆப்பில் எளிதில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம். அல்லது - https://pmkisan.gov.in/ என்ற பிஎம் கிசான் இணையதளத்திற்குள் செல்லவும். இதில் Farmer Corner என்ற Optionயைக் Click செய்து ஆதார் எண்ணைப் பதிவு செய்யவும். அங்கு கொடுக்கப்படும் captcha code யை submit செய்யவும். பெயரில் தவறு இருந்தால் அங்கேயே இதை மாற்றிக்கொள்ளலாம்.
அவ்வாறு செய்ய இயலவில்லையென்றால், 011-24300606 என்ற PM-Kisan Helpline எண்ணைப் பயன்படுத்தி உங்கள் தவறைத் திருத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

செடியில் புழுத்தாக்குதலைக் புரட்டிப்போடும் இஞ்சி-பூண்டு- மிளகாய்க் கரைசல்!

நீங்களும் அஞ்சலக முகவராக வேண்டுமா?- சிறிய முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழில்!

English Summary: 42 lakh farmers do not get PM's Kisan fund - How to get it?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.