1. விவசாய தகவல்கள்

20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி

Deiva Bindhiya
Deiva Bindhiya
20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி
60,000 rupees in dragon fruit cultivation at 20 cents

டிராகன் பழம்: சில காலங்களுக்கு முன், இந்த பழத்தின் பெயர் பலருக்கு புதிதாகவும், வித்தியாசமாகவும் தெரிந்தது. ஆனால் காலப்போக்கில், இதன் சாகுபடியும் வியபாரமும் சுடு பிடிக்க தொடங்கியது. தற்போது விவசாயிகளுக்கு, இது நல்ல லாபம் தரும் பழ வகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படியிருக்க இந்த பழ சாகுபடி எவ்வாறு மேற்கொள்வது மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னன்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

டிராகன் பழம் செடி வளர்ப்பது எப்படி? Dragon Fruit Cultivation in Tamil

இந்த டிராகன் பழம் நாம் அதிகம் அறிந்திடாத பழவகைகளில் ஒன்றாகும். இருப்பினும் பரவலாக இந்த டிராகன் பழம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை போலவே காட்ச்சியளிக்கின்றது. இது கற்றாழை குடும்பத்தை சார்ந்த கொடிவகை கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும். இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். ஆரம்பத்தில் இதனை சாகுபடி செய்யும் போது செலவுகள் கொஞ்சம் நிறைய இருக்க கூடும். அதன் பிறகு செலவுகள் அதிக இருக்காது. சரி இந்த டிராகன் பழத்தை எப்படி சாகுபடி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

டிராகன் ஃப்ரூட் கன்றுகள் எங்கு கிடைக்கு?

இந்த சாகுபடிக்கான கன்றுகள் பெற குஜராத்தில் வாங்கிக்கொள்ளலாம். குஜராத்தில் வாங்கினால் கள்ளிச்செடி போன்று வளரும், கொடியாகப் படரும் என்பது குறிப்பிடதக்கது.

டிராகன் பழம் வகைகள்:

இந்த டிராகன் பழத்தில் மூன்று வகைகள் உள்ளது அவற்றை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  • சிவப்புத் தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம்.
  • சிவப்புத் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
  • மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.

மேலும் படிக்க:

ஆதார் அட்டை பயன்படுத்தி Transaction செய்யலாம், இனி OTP தேவையில்லை

ரூ.10,000 மானியம்: 5ரம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வழங்கல்.

பயிரிடும் முறை:

இடத்திற்கு ஏற்றது போல் கல்தூண்கள் அல்லது சிமென்ட் தூண்கள் மற்றும் அதன் உச்சியில் வட்ட வடிவ சிமென்ட் மூடி தேவை. 6×8 அடி இடைவெளியில் கல்தூண்கள் நடவேண்டும். ஒரு கல் தூணைச் சுற்றி நான்கு டிராகன் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

வறட்சியை தாங்கி வளரக்கூடிய குணத்தை கொண்டது, இந்த டிராகன் பழம் ஆகும். ஆக நீர்ப்பாசனம் முறை பொறுத்தவரை வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் கன்றுகளுக்கு நீர் பாசனம் செய்தால் போதுமானது.

அறுவடை காலம்:

டிராகன் கன்றுகளை நடவு செய்த நாளில் இருந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு டிராகன் பழம் அறுவடைக்கு தயாராக இருக்கும்.

இயற்கை உரம்:

பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்கள், இந்த டிராகன் சாகுபடியில் இருக்காது. அதனால் இயற்கை உரங்களான மண்புழு உரம், மக்கிய தொழு உரம், பஞ்சகாவியா பயன்படுத்திதான் சாகுபடி செய்கின்றன. இவை வருடத்திற்கு ஆறு மாதம் பலன் அளிக்கக்கூடியது.

ஒரு தூணுக்கு வருடத்திற்கு சராசரியாக 8 முதல் 10 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 200 முதல் 750 கிராம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் கவாத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒரு விஷயம், எனவே இதனை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த சாகுபடியை நீங்கள் வெறும் 20 செண்டில் ஆரம்பித்தால் கூட 60,000/- வரை வருமானம் கிடைக்கும்.

மேலும் படிக்க:

ஆதார் அட்டை பயன்படுத்தி Transaction செய்யலாம், இனி OTP தேவையில்லை

ரூ.10,000 மானியம்: 5ரம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வழங்கல்.

English Summary: 60,000 rupees in dragon fruit cultivation at 20 cents Published on: 09 February 2023, 04:52 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.