ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு 70,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பதாவது
விவசாயிகளின் நலனுக்காக ஒவ்வொரு திட்டத்திலும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் எனும் தலைப்பில், “இவ்வரசினால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.
கூடுதல் மானியம் வழங்கப்படும் திட்டங்கள்
ஒருங்கிணைந்த பண்ணையம்
பயிர் சாகுபடியுடன், கறவை மாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
ரூ. 70,000
ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000 மொத்தம் ரூ. 70,000- மானியமாக வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
சூரிய கூடார உலர்த்திகள்
அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு 40 சதவீத மானியத்தில் சூரிய கூடார உலர்த்திகள் அமைத்து தரப்படுகிறது. மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் ஆக மொத்தம் 60 சதவிகித மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, <https://www.tnagrisnet.tn.gov.in> அல்லது <https://tnhorticulture.tn.gov.in> அல்லது <https://aed.tn.gov.in> இணையதளம் மூலமாகவோ தேவையான விவரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
Share your comments