விவசாயிகள் திட்டம்: ஏக்கருக்கு ரூ. 31250 முதல் ரூ .1.26 லட்சம் வரையிலான மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஸ்டாக்கிங் நுட்பம் முலம்(அடுக்கி வைப்பதன்) விவசாயம் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
காய்கறிகளில் மூங்கில் ஸ்டாக்கிங் மற்றும் இரும்பு ஸ்டாக்கிங் பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு 50 முதல் 90 சதவீதம் மானியம் வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ள, விவசாயிகள் தோட்டக்கலை இணையதளத்தில் (https://hortharyanaschemes.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேளாண் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், நவீன காலத்தில், விவசாயத்தில் புதிய நுட்பங்கள்(New Technique) கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. காய்கறிகள் சாகுபடியில் ஸ்டாக்கிங் என்பது ஒரு முறை ஆகும், இதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்.
மூங்கில் அல்லது இரும்பு கம்பங்கள், மெல்லிய கம்பி மற்றும் கயிறு ஆகியவை ஸ்டாக்கிங் நுட்பத்துடன்(Stalking Technique) விவசாயம் செய்ய வேண்டும். இந்த முறையால், பயிர்களின் மகசூல் அதிகமாக கிடைக்கும், இதன் காரணமாக விவசாயிகளின் லாபம் அதிகரிக்கிறது. மூங்கில் ஸ்டாக்கிங் மற்றும் இரும்பு ஸ்டாக்கிங் ஆகியவற்றிற்கு தனி மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நுட்பத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.62,500 செலவாகும் மூங்கில் அடுக்கில் ரூ.31250 முதல் ரூ.56250 வரை மாநில அரசு மானியம் வழங்கி வருகிறது.
அதிகபட்சம் 2.5 ஏக்கருக்கு மானியம் கிடைக்கும்-A maximum of 2.5 acres will be subsidized
இரண்டு வகையான ஸ்டாக்கிங்கிற்கும் அதிகபட்ச மானியம் ஒன்று முதல் 2.5 ஏக்கர் வரை என்று அரசாங்கம் கூறியது. ஸ்டாக்கிங் நுட்பத்திற்கு முன், விவசாயிகள் பாரம்பரிய முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிட்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு குறைந்த லாபம் கிடைத்தது. ஆனால் இப்போது விவசாயிகள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்கிறார்கள், ஏனென்றால் இது மிகவும் எளிதானது மற்றும் இந்த நுட்பத்தில் மிகக் குறைந்த பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதில், மூங்கில் மற்றும் இரும்பு கம்பி உதவியுடன் கம்பி மற்றும் கயிற்றின் வலை தயாரிக்கப்பட்டு பயிர் வளர்க்கப்படுகிறது.
காய்கறிகள் அழுகாது
இந்த நுட்பத்துடன் பயிரிடும்போது, காய்கறிகளின் பயிரில் அழுகல் ஏற்படாது, ஏனென்றால் அவை தரையில் இல்லாமல் மேல் தொங்குகின்றன. பாகற்காய், தக்காளி மற்றும் பூசணி போன்ற பயிர்களை அழுகாமல் காப்பாற்ற, இந்த நுட்பத்துடன் அவற்றை ஆதரிப்பது நல்லது. பாரம்பரிய விவசாயத்தில், தக்காளி பயிர் நிலத்துடன் தொடர்பு கொள்வதால் அழுக ஆரம்பிக்கும் என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் ஸ்டாக்கிங் டெக்னிக்கில்(Stalking technique) அப்படி எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது.
மேலும் படிக்க:
Share your comments