1. விவசாய தகவல்கள்

ஒரு கிலோ ரூ. 5000- த்திற்கு!!!மருத்துவத் தாவரம்! சிவப்பு கற்றாழை!!!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Medicinal plant! Red Aloe vera !!!

கற்றாழை சந்தையிலும் சரி மருத்துவ மதிப்பின் அடிப்படையிலும் சரி முன்னணி தாவரங்களில் ஒன்றாகும். உலகில் 400 க்கும் மேற்பட்ட கற்றாழை வகைகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது சிவப்பு கற்றாழை.

ஆப்பிரிக்கா கற்றாழையின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. ஆனால் அவை அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் சிவப்பு கற்றாழை சதைப்பகுதியின் உட்புறத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

சிவப்பு கற்றாழை சாகுபடி முறைகள்

சிவப்பு கற்றாழை சாகுபடி கேரளாவின் காலநிலைக்கு மிகவும் ஏற்றது.வயலில் காணப்படும் களைகளை  அகற்றி நன்கு தயார் செய்வது முதல் படி. சிவப்பு கற்றாழை சாகுபடிக்கு வளமான கருப்பு மண்ணைத் தேர்ந்தெடுக்கலாம். பசுவின் சாணம் அல்லது ஆட்டு சாணத்தை அடித்தள உரமாக கொடுப்பது நல்லது. நாற்றுகளுக்கு இடையில் சரியான இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். குறைந்தது 50 செமீ தூரம் இருக்கிறதா என்று கவனித்து கொள்ள வேண்டும். சிவப்பு கற்றாழை நாற்றுகளை மண்ணில் மட்டுமின்றி கிரோபேக்கிலும் வளர்க்கலாம்.

நடவு செய்யும் போது சூரிய ஒளி இருக்கும் இடத்தை தேர்வு செய்வது நல்லது. மழைக் காலத்தில்  பானைகளில் வளர்ப்பவர்கள் கீழே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சிவப்பு கற்றாழை நாற்றுகள் குறிப்பிடத்தக்க நோயை ஏற்படுத்தாது. நடவு செய்த சுமார் எட்டு மாதங்களில் செடி  முதிர்ச்சியடைகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம் என்று

விவசாயிகள் கூறுகின்றனர். இந்த கற்றாழை சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது இரத்தத்தை சுத்தப்படுத்தும். கூடுதலாக, கற்றாழை சாற்றின் பயன்பாடு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க உதவும்.

இதன் கீறுகள் மருத்துவம் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, கற்றாழை இரும்பு, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது. இந்த சிவப்பு கற்றாழை ஒன்று நடுவதற்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகும். சுமார் ஒரு கிலோ கீறுகள் சந்தையில் ரூ .5,000 வரை கிடைக்கும்.

மேலும் படிக்க...

தொற்று நோய்க்கு மருந்தாகும் கற்றாழை-அசத்தல் பலன்களின் பட்டியல்!

English Summary: A kilo of Rs. For 5000 !!! Medicinal plant! Red Aloe vera !!! Published on: 13 August 2021, 03:34 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.