வேப்ப எண்ணெய்+ பூண்டு கறைசல் :-
இந்தியாவில் தேங்காய் உற்பத்தி இந்தியபொருளாதரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகளவில் இந்தியா தேங்காய் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
2009 ஆம் ஆண்டுல் இந்தியாவின் உற்பத்தி 1,08,94,000 டன்களாக இருந்தது. தென்னையின் பொருளாதார வளர்ச்சி குறைப்பது ஈரியோஃபைட் பேன்கள் முக்கிய பங்காற்றின.தென்னை ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் மற்றும் பூண்டு கறைசலைப் பற்றி கீழ் காண்போம். ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்தும் முறை- வேளாண் மாணவர் விளக்கம்.
கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் ஆ.பிரகாஷ் தென்னையில் ஈரியோஃபைட் பேன்களைக் கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது
வேப்ப எண்ணெய்+பூண்டு கரைசளுக்கு தேவைப்படும்
பொருட்கள் :-
o 200 மி.லி வேப்ப எண்ணெய்
o 200 கி.கி பூண்டு
o 50 கி.கி சாதாரண சோப்பு
செய்முறை :-
• சோப்புக் கட்டினை துண்டுகளாக்கி 500 மி.லி. தண்ணீரீல் கரைக்க வேண்டும்
• 200கி.கி பூண்டினை அரைத்து ,300 மி.லி தண்ணீருடன் சேர்க்கவும்.
• 500 மி.லி சோப்பு கரைசலை 200 மி.லி வேப்ப எண்ணெயையுதன் சேர்கவும்.
• வேப்ப எண்ணெய் , சோப்பு கரைசலுடன் பூண்டு கரைசலை சேர்க்கவும்.
• இந்த 1 லிட்டர் கரைசலுடன் 9 லிட்டர் தண்ணீர் சேர்த்த கரைசலை தென்னையில் அடிக்கவும்
பயன்கள் :-
தென்னையில் ஈரியோஃபைட் பேன்களை கட்டுப்படுத்த இயலும். மகசூல் அதிகரிக்கும் மற்றும்
வாழைக் கன்று நேர்த்தி முறை ( Banana sucker treatment) - வேளாண் மாணவர் விளக்கம்.
கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் ஆ.பிரகாஷ் வாழைக் கன்று நேர்த்தி முறை பற்றி விளக்கம் அளித்தார்
அவர் கூறியதாவது,
இந்தியாவிலேயே வாழை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் வாழை சுமார் 12 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. வாழையில் நூற்புழு மற்றும் பனாமா வாடல் கட்டுப்படுத்த வாழை நேர்த்தி அறிமுகம் செய்யப்பட்டது. வாழை கன்று நேர்த்தி முறை பற்றி கீழ் காண்போம்.
வாழை நேர்த்தி செய்ய தேவையான பொருட்கள்:
வாள் நேர்த்தி, கார்போஃப்யூரான் 3 ஜி, 0.2 % கார்பென்டாசிம் (2 கிராம்/1 லிட்டர் தண்ணீர்), களிமண் கூழ்
நேர்த்தி முறையில் வாழை ரகங்கள் :நேந்திரன், ரொபஸ்டா, மொந்தன், பூவன், சிவப்புவாழை, ரஸ்தாலி, கற்பூரவள்ளி
வாழை நேர்த்தி முறை :
வாள் உறிஞ்சியை தேர்வு செய்ய வேண்டும். வேர்கள் மற்றும் சிதைந்த பகுதியை ஒழுங்கமைக்கவும்.களிமண் கூழிலில் உறிஞ்சிகளை நினைக்கவும். புழுக்கள் களிமண் கூழிலில் தோய்க்கப்பட்டன.கார்போஃப்யூரான் 3 ஜி கரைசலில் நனைக்க வேண்டும்.உறிஞ்சிகளின் நடவு.தரமான நூற்புழு அற்ற வாழை கன்று வளர்த்தல்.
பயன்கள் :
நூற்புழுக்களை முற்றிலும் அகற்ற இயலும். வாழை நேர்த்தியில் கார்பென்டசிம் சேர்ப்பதன் மூலம் பனாமா வாடல் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு :-
ஆ.பிரகாஷ் , இளங்கலை வேளாண் மாணவன் மற்றும் முனைவர் பா.குணா, இனணப் பேராசிரியர், வேளாண் விரிவாக்க துறை, நாளந்தா வேளாண்மை கல்லூரி, எம். ஆர். பாளையம் , திருச்சி .
மின்னஞ்சல் : baluguna8789@gmail.com.
தொலைபேசி எண் : 9944641459 ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க:
Grain ATM: இனி ATM மூலம் ரேஷன் கோதுமை மற்றும் அரிசி கிடைக்கும்
PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Share your comments