தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தியை அதிகரிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தென்னை ஆலை உரிமையாளர்களும், தென்னை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர், உடுமலையில் நீரா பானம் உற்பத்தி
கோவை, திருப்பூர், உடுமலை உட்பட தமிழகத்தில் 14 நிறுவனங்களுக்கு நீராபானம் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அரசின் அனுமதியை தொடர்ந்து நிறுவனங்கள் ஆர்வமுடன் உற்பத்தியில் ஈடுபட்டன. ஆனால்,தொடங்கிய வேகத்தில் பல நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, தற்போதைய நிலையில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே ‘நீரா' உற்பத்தியில் உள்ளன. இதற்கு அரசின் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
நீரா பானம் - திமுக தேர்தல் அறிக்கை
இதைத்தொடர்ந்து, திமுக தேர்தல்அறிக்கையில் ‘நீரா' உற்பத்தியை ஊக்குவிக்கவும், விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. அதனடிப்படையில், துறை ரீதியாகநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
விற்பனை நடவடிக்கை தேவை
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள உடுமலை தென்னை விவசாயிகள், தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகள் அடங்கியது ‘நீரா' பானம். ஆனால், ஒருநாள் மட்டுமே அதன் ஆயுள். அடுத்தநாள் கெட்டுவிடும். அதற்குள்ளாகவிற்றாகவேண்டும். உடுமலையில் உற்பத்தியாகும் பானத்தை உடனடியாக விற்பதற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவு
ஒவ்வொரு நிறுவனமும் தலா 100 மரங்களில் ‘நீரா' எடுக்க முதல்கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான ஆய்வறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க....
பருப்பு விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை! : ஒருங்கிணையும் மத்திய - மாநில அரசுகள்!
கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வெங்காய விதை வினியோகம்!
அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் புதியத் திட்டங்கள்!
Share your comments