1. விவசாய தகவல்கள்

டிஏபிக்கு பதிலாக எம்ஏபி மாற்று உரம்- பயிர்களுக்கு நன்மை தருமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
alternative fertilizer to DAP

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் டிஏபி உரத்திற்கு மாற்றாக மோனோ அமோனியம் பாஸ்பேட் என்ற 11 சதவீதம் தழைச்சத்து 52 சதவீதம் மணிச்சத்துடன் தற்பொழுது விற்பனை செய்யப்படும் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்படுத்திடுமாறு மாவட்ட ஆட்சியர் சார்பில் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பல்வேறு தீர்வுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில்- அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் மார்கழி பட்டத்தில் பயிரிட வேண்டிய பயிர்கள் குறித்தும், உர பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு-

2023-2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் முடிய நெல் 90,558 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1890 எக்டர் பரப்பளவிலும், பயறு வகைப் பயிர்கள் 1552 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய் வித்து 4491 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 1554 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 19 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 13,109 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 114.401 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 26.605 மெ.டன் பயறு விதைகளும், 21.207 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 4.100 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.817 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மழையளவு நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு மார்கழி பட்டத்தில் குறைந்த அளவு நீர் தேவைப்படும் கேழ்வரகு, நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டிஏபிக்கு பதிலாக எம்ஏபி மாற்று உரம்:

மோனோ அமோனியம் பாஸ்பேட் என்ற 11 சதம் தழைச்சத்து 52 சதம் மணிச்சத்துடன் தற்பொழுது விற்பனை செய்யப்படும் எம்ஏபி உரத்தினை டிஏபி-க்கு பதிலாக வாங்கி பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.

இதனால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து உரம் தேவையான அளவு கிடைப்பதோடு மணிச்சத்து அதிகளவில் கிடைப்பதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சிநோய் தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

விதை வாங்கும் போது இதை நோட் பண்றீங்களா? விவசாயிகளின் கவனத்திற்கு

PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!

English Summary: Advice to farmers use of MAP as an alternative fertilizer to DAP Published on: 25 December 2023, 12:37 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.