1. விவசாய தகவல்கள்

அரிசி உமிக்கு அதிகரிக்கும் மவுசு- காரணங்களை அடுக்கும் வேளாண் ஆலோசகர்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
rice husk uses in various field

அதிகரித்து வரும் கழிவுகளை புதிய தொழில்நுட்ப உதவியுடன் மறுசுழற்சி முறையில் அன்றாட வாழ்வில் நமக்கு பயனுள்ள வகையில் மாற்றி பயன்படுத்தும் போக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கணிசமாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் வேளாண் கழிவுகளில் ஒன்றாக விளங்கும் அரிசி உமியினை பல்வேறு வகையில் பயனுள்ளதாக உபயோகப்படுத்தும் முறை மேலை நாடுகளிலும் அதிகமாக காணப்படுகிறது. இதுக்குறித்து வேளாண் ஆலோசகரான, அருப்புக்கோட்டையினைச் சேர்ந்த அக்ரி சு.சந்திர சேகரன்- அரிசி உமியும், அதன் பயன்களும் குறித்து சில தகவல்களை கிரிஷி ஜாக்ரானுடன் ” அரிசி உமிக்கு கிடைத்த வாழ்வு” என்கிற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். அதுக்குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-

அரிசி உமிக்கு என்ன வாழ்வு வரப்போகிறது? என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது. ஆமாம் நெல்லை அரிசியாக அறைக்கும் போது முதலில் வருவது உமி. அது இன்றைக்கு  கட்டுமானத் தொழில் , பிளைவுட் தயாரிப்பு, சிமெண்ட் போன்றவற்றின் தயாரிப்புகளில் முக்கிய காரணியாக உள்ளது. அத்துடன் மண்வளத்தை மேம்படுத்தி, மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்படுத்திடவும் பயன்படுகிறது என்றால் வியப்பாக உள்ளதல்லவா! அதற்கான காரணங்களை காண்போம்.

அரிசி உமியில் என்ன இருக்கு தெரியுமா ?

அரிசி உமியில் 38% செல்லுலோஸ்யும், 32% லிக்னின் உள்ளது. மறுசுழற்சியில் பயன்படுத்தக் கூடிய எரி பொருளாக உள்ளது.மேலும் இதில் 95% சிலிக்காவும் 22% சாம்பலும் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் இது எரிபொருளாக கொதிகலன்களிலும், விவசாயத் தேவைக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு டன் உமி ரூ.7000 முதல் 9000 வரை விற்கபடுகின்றது.

உமிக்கு வந்த வாழ்வு எப்படி?

வெப்ப மண்டல நாடுகளில் நிலவும் வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக, வீடுகளில் குளிரூட்டிகள் எனப்படும் AIR CONDITIONER பயன்பாடு அதிகளவில் உள்ளது. இவற்றை இயக்க அதிக அளவு மின்சாரம் தேவைப்படும். இந்நிலையில் இதற்கு மாற்றுமுறையை பனாமா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அரிசி உமியை பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் வெப்பத்தை குறைக்கலாம் என நிரூபித்துள்ளனர். அதன்படி, உமியை பயன்படுத்தி வீட்டின் மீது பலகை வைத்து வெப்பத்தை அறைக்குள் இறங்காமல் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை நல்ல பலனை தந்துள்ளது. இதனையடுத்து சர்வதேச சந்தையிலும் நெல் உமிக்கு அதிக அளவு டிமாண்ட் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Read also: சொட்டு நீர் பாசனம் அமைக்க சரியான நேரம்- மானியத்தை அறிவித்த ஆட்சியர்

அரிசி உமியின் சிறப்பு என்ன?

இது புதுப்பிக்க தக்க எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய அரிசிஉமியின் சாம்பலுக்கு அதிக கிராக்கி இருப்பதாலும், அடுத்த 5 ஆண்டுகளில் இதனுடைய வளர்ச்சி 5% வரை கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது கட்டுமான தொழிலில், சிமெண்டுடன்- உமி சாம்பல் கலக்கப்படுகிறது. இதில் அதிக அளவாக பொட்டாசியம் சிலிக்கா இருப்பதால் நிலத்தில் இடுவதன் முலம் மண்ணின் கட்டமைப்பை மாற்றுவதுடன், மண்ணின் அடர்த்தி குறைந்து மண்வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும், சந்தேகங்கள்/ முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர், அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புக்கொண்டு விளக்கம் பெறலாம். தொடர்புக்கு: 9443570289

Read also:

தென் மாவட்டங்களை நோக்கி நகரும் மேகக்கூட்டம்- கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரம்

English Summary: Agricultural consultant lays out the reasons for increased mold in rice husk Published on: 06 January 2024, 01:04 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.