கொரோனா ஊரடங்கால் வோளாண்மை பணிகளைத் தொடர முடியாமல் முடங்கிக்கிடக்கும் விவசாயிகள், வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் வேளாண் தங்கக் கடனை அளிக்கிறது எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி.
கொரோனாவால் பெரும் பாதிப்பைச் சந்தித்த விவசாயிகளுக்கு தென்மேற்கு பருவமழை கைகொடுத்து உதவியுள்ளது. எனவே இதனைப் பயன்படுத்திக்கொண்டு, வேளாண் பணிகளைத் தொடங்குவதில், பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும் விவசாயியா நீங்கள்?
அப்படியானால், உங்களைப் போன்றோருக்கு உதவ முன்வந்துள்ளது எஸ்பிஐ வங்கியின் அக்ரி கோல்டு லோன் (Agri Gold Loans) திட்டம்.
சிறப்புஅம்சம் (Features)
இதுவரை தங்கத்தின் மொத்த மதிப்பில் 75 விழுக்காடு மட்டுமே கடனாக வழங்கப்பட்டது. அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், தங்கத்தின் மதிப்பில் 90 விழுக்காடு கடனாக வழங்க வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தங்கக் கடன் வாங்க இதுவே சரியான நேரம்.
வேளாண் தங்கக் கடன் (SBI Agri Gold Loan )
இத்திட்டத்தில், வேளாண் பணிகள் அனைத்திற்கும் கடன் கிடைக்கும். குறைந்த வட்டியில் உடனே கடன் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் வரை பெறும் கடனுக்கு, ஆண்டுக்கு 7.25 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது.
நிபந்தனைகள்
-
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விவசாயிகள் தங்களுக்கு சொந்தமாக உள்ள நிலத்தின் ஆவண நகலை ஒப்படைக்க வேண்டியது கட்டாயம்.
-
நகைகளை அடமானம் வைத்துத், தங்களுக்குத் தேவைப்படும் தொகையை, விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.
திட்டத்தின் பயன்கள் (Benefits of SBI Gold Loan)
-
தங்க ஆபரணங்களை அடமானம் வைப்பதால், விரைவில் கடன் வழங்கப்படும்.
-
கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
-
மிகக் குறைந்த வட்டி விகிதம்
-
மறைமுகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
-
தொகையைத் திரும்பச் செலுத்துவதிலும், விவசாயிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு சலுகைகள்
தேவைப்படும் ஆவணங்கள் (Documents Required)
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு
-
வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், இவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாக அளிக்கவேண்டும்.
-
முகவரிச்சான்று
-
விவசாய நிலத்திற்கான சான்று
விண்ணப்பிப்பது எப்படி?
-
உங்கள் செல்போனில் YONO app மூலமும் விவசாயிகள் எஸ்பிஐ தங்கக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.
-
கடனைப் பெறுவதற்கு மட்டும் வங்கிக்கு சென்றால் போதும்.
-
இந்தத் திட்டங்களின் கீழ் கடன் பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையை அணுகவும்.
-
மேலும் எஸ்பிஐ வங்கியின் அலுவலக இணையதளமான https://sbi.co.in மூலமும் விவசாயிகள் தங்கக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பி செலுத்த அவகாசம்
வேளாண் தங்கக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதற்கு 12 மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க...
விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!
Share your comments