நோக்கங்கள்
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறச்செய்திடல், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்தல், விவசாயிகளின் சந்தைக்கான அணுகுதலை எளிதாக்கல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல்.
அரசின் நிதியுதவி
வட்டி சலுகை திட்டம் - 3 சதவீதம் வட்டி சலுகை, அதிகபட்சமாக ரூ.2.00 கோடி வரை, 7 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
கடன் உத்திரவாதம் - CGTMSசின் கீழ் ரூ.2.00 கோடி வரை, (உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஊக்குவிப்பு நிதி ஆதரவு) இதர ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களிலும் பயன் பெறலாம்.
தகுதியான திட்டங்கள்: அறுவடைக்கு பின் மேலாண்மை திட்டங்கள்
- விநியோக தொடர் சேவைகள்
- கிடங்குகள்
- சிப்பம் கட்டும் கூடங்கள்
- ஆய்வுக்கூடங்கள்
- குளிர்பதன தொடர் சேவைகள்
- தளவாட வசதிகள்
- முதன்மை பதப்படுத்தும் மையங்கள் - சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல், மின்னனு
- சந்தையுடன் கூடிய விநியோக தொடர் - சூரிய மின் சக்தியுன் கூடிய உட்கட்டமைப்பு.
- பழுக்க வைக்கும் அறைகள்
தகுதியான பயனாளிகள்
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் (Pacs).
- சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள் (MCS),
- விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO's)மற்றும் கூட்டமைப்புகள்,
- சுய உதவி குழுக்கள் (SGH's),
- கூட்டுப்பொறுப்பு குழுக்கள் JLGs,
- பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள்,
- வேளாண் தொழில் முனைவோர் மத்திய மாநில அரசு உதவி பெறும் பொது-தனியார் கூட்டு திட்டங்கள்,
- சுய உதவிக்குழுக்கள்,
- தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள்,
- அரவை உரிமையாளர்கள்,
- ஏற்றுமதியாளர்கள்,
- வர்த்தகர்கள்,
- உணவு பதப்படுத்துவோர் மற்றும்
- மாநில சேமிப்பு கழகங்கள்.
தொடர்புக்கு: 7200818155/18004251907
ஜூலை 2020க்கு மேல் பெறப்பட்ட கடனுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:
Neet UG 2022 தேர்வுக்கான Answer Key எப்படி தெரிந்துக்கொள்வது?
முருகப்பா குழுமம் 'Montra' 3 சக்கர மின் வாகனத்தை முதல்வர் முன்னிலையில் அறிமுகம்!
Share your comments