1. விவசாய தகவல்கள்

மலட்டுத்தன்மை நோக்கி நகரும் மண் வளம்- என்ன செய்து காப்பாற்றலாம்?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Agricultural land Soil fertility

விவசாயத்திற்கு அடிப்படை மூலதனமான மண்ணின் வளமானது நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அவற்றை மேம்படுத்த வேண்டிய பொறுப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மண்ணின் வளத்தை சரி செய்யும் முறைகள் குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திரசேகரன் சில தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

மண் வளமாக இருந்தால்தான் மக்கள் நலமாக இருப்பார்கள்.1960-க்கு பிறகு அதாவது பசுமை புரட்சிக்கு பின்னர் படிப்படியாக மண்வளம் குறைந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அன்று எந்த விதமான உரமும் போடாமல் உழவு சாண குப்பை குள கரம்பை இவற்றால் அள்ளி அள்ளி கொடுத்த நிலம் இன்று மகசூலை கிள்ளிக் கொடுத்து வருகிறது. போதாத குறைக்கு இயற்கையின் சீற்றங்கள் வேற.

இன்றைய மண்ணின் நிலை:

நல்ல மகசூலை தருவதற்கு அடிப்படையானது மண்ணின் வளமே. பொதுவாக மண்ணில் கரிமசத்துகள்( கார்பன்) வளம் 0.8% முதல் 1.3% இருந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில்1971-ல் மண்ணில் கார்பன் வளம் 1.2 % என இருந்து, 2002-ல் 0.68% யாக குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிய வந்துள்ளது. எடுத்துக்காட்டாக கிருஷ்ணகிரியில் 2014-ல் மண்வளம் குறைந்து கார்பன் 0.36% காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வளமிகுந்த மண் எப்படி இருக்க வேண்டும்?

வளம் மிகுந்த மண்ணில் காற்று 25%-ஆகவும், 5-10% சிறு உயிரினங்களும்,உதிர்ந்த இலைகளும் இறந்த உயிரினங்களும் இருக்க வேண்டும்.

எப்படி மண்வளத்தை குறைக்கிறோம் தெரியுமா?

நாம் தேவைக்கு அதிகமாக இரசாயன உரங்களை போட்டி போட்டுக்கொண்டு இட்டு பயிர்கள் பச்சைபசேலாக இருக்க வேண்டும் என எண்ணி உரங்களை இடுகிறோம்.

இதனுடைய விளைவாக பயிர்கள் பச்சைபசேலாக மாறி  பூச்சி/ நோய்களை நாம் தான் வர வழைக்கிறோம். இதை தடுக்க பூச்சிமருந்துகள் தெளிப்பதால் நாம் நஞ்சு கலந்த உணவை உற்பத்தி செய்வதுடன் இரசாயனங்களின் எச்சம் ( CHEMICAL RESIUDE) நிலங்களில் தங்கி மண்வளம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு ஏறக்குறைய மலட்டு தன்மையை நோக்கி செல்லுவதை நாம் பார்த்து கொண்டேதான் இருக்கிறோம்.

இதற்கு நாம் என்ன செய்யலாம்?

1) 7 உழவு போட்டால் எரு போட வேண்டியதில்லை என்பது பழமொழி கோடை உழவில் ஆரம்பித்து தொடர்ந்து பயிர்விதைப்பு வரை உழவு போட வேண்டும்.

2) குள கரம்பை அடிக்க வேண்டும். அரசு இலவசமாக  வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்த காலங்களில் கரிசல் மண் நிலத்திற்கு செம்மண்ணும், செம்மண் நிலத்திற்கு கரிசல் மண்ணையும் அடிக்க வேண்டும்.

  • கிடை அமர்த்துதல் (ஆட்டுகிடை / மாட்டுக்கிடை) நிலத்தில் இரவில் தங்க விடுதல்
  • பலதானிய பயிர் விதைத்து மடக்கி உழவு போடுதல்
  • மண்பரிசோதனை படி உரமிடுதல்
  • சத்தூட்டிய தொழு உரம் (ENRICHED FARMYARD MANURE) தயாரித்து இடுதல்.

Read also: இடைக்கால பட்ஜெட் 2024- விவசாயிகளுக்கும் வருமான வரி?

இவ்வாறாக செய்தால் இழந்த மண்வளத்தை படிப்படியாக மீட்டு வர வாய்ப்புள்ளது. நல்ல வளமான மண் இருந்தால் தான் வளமான மனித வளம் உருவாக்கிட முடியும் என அக்ரி சு.சந்திர சேகரன் (வேளாண் ஆலோசகர்) தெரிவித்துள்ளார்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி.சு சந்திர சேகரன் அவர்களை தொடர்புக்கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289)

Read more:

நட்ட மாத்திரத்தில் லாபம்- டர்க்கி பிரவுன் ரக அத்தி சாகுபடி முறைகள்!

English Summary: Agricultural land Soil fertility moving towards sterility Published on: 27 January 2024, 12:18 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.