நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மண் பரிசோதனை நிலையம் (Soil Test Center) மூலம் மண் மாதிரிகள் சேகரித்து, ஆய்வு செய்து மண்வள அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு, சாகுபடி (Cultivation) செய்யப்படும் பயிருக்கு இடவேண்டிய உரங்களின் அளவு, மண்ணில் களர், உவர், அமில பிரச்சினைகள் இருப்பின் தீர்வுக்கான பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
மண் பரிசோதனை
நீலகிரி மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 1,500 மண் மாதிரிகள் சேகரித்து மண்வள அறிக்கை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் தொடக்கமாக ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்தில் விளை நிலங்களில் மண் மாதிரிகள் (Soil Samples) சேகரிக்கப்பட்டது. இந்த முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தி பிரேம்குமார் மண் மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து விவரித்தார். இதில் வேளாண் அலுவலர் நிர்மலா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரூ.20 கட்டணம்
ஒரு மண் மாதிரி ஆய்வு செய்து அறிக்கை வழங்க ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மண் பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள், நேரடியாக மண் மாதிரிகளை ஊட்டி ரோஜா பூங்கா அருகே உள்ள மண் பரிசோதனை நிலையத்திற்கு எடுத்து வந்து அறிக்கை பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.
அவசியம்
மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ப பயிர்களை பயிரிட்டால் நிச்சயம் மகசூல் அதிகரிக்கும். அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை செய்வது மிக அவசியம் என்று வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க
தாலுகா வாரியாக காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலையில், குமரியில் வேளாண் பாசனத்திற்கு நாளை அணைகள் திறப்பு!
Share your comments