1. விவசாய தகவல்கள்

100% மானியத்தில் நுண்ணீா் பாசன கருவிகள் - பயன்பெற விவசாயிகள் அழைப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த 100% மானியத்தில் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கப்படுகிறது.

100% மானியத்தில் கருவிகள்

இது குறித்து சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பக ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சேரன்மகாதேவி வட்டாரத்தில் பிரதம மந்திரி திட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் தெளிப்பு நீா் கருவி, மழைத் தூவான்ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதம், இதர விவசாயிகளுக்கு 75 சதமும் மானியம் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல், நிலம் வரைப்படம், சிறு விவசாயி சான்று, நீா் மண் பகுப்பாய்வு, வங்கிக் கணக்குப் புத்தக நகல் போன்ற ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பதிவு எண் வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தோ்வு செய்தபின், விலைப்புள்ளி தயாரித்துப் பணி ஆணை வழங்கப்படும். திட்டத்தில் சிறு, குறு, பொது, ஆதி திராவிடா், மகளிா் மற்றும் இதர விவசாயிகளும் பங்கு பெறலாம். அதிகபட்சமாக 12.5 ஏக்கா் வரை பயன்பெறலாம். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி அலுவலரை தொடா்பு கொள்ளலாம்

சூலுார் விவசாயிகளுக்கு அழைப்பு

இதேபோல், சூலுார் வட்டாரத்தில் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு, ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சூலுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நுண்ணீர் பாசன திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பேசிய வேளாண் துணை இயக்குனர் சபி அகமது வேளாண் துறை வாயிலாக, மத்திய அரசின் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கான கருவிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

குறைந்த நீரில், அதிக பரப்பளவில், பயிர் சாகுபடி செய்து இரு மடங்கு லாபம் ஈட்டும் நல்ல திட்டமாகும். நடப்பாண்டில், சூலுார் வட்டாரத்தில், 165 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.1.02 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய எண் 

சூலுார், ராசிபாளையம், காடாம்பாடி, காங்கயம்பாளையம் உட்பட கிராம விவசாயிகள், சந்தோஷ்குமார் -8122529623, பதுவம் பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், மோப்பிரிபாளையம் பகுதி விவசாயிகள், ராமச்சந்திரன் -97863445166, சோமனூர், கணியூர், செம்மாண்டம்பாளையம் விவசாயிகள், அன்பரசன் - 97881 10620, கண்ணம்பாளையம், கலங்கல், பட்டணம் பகுதி விவசாயிகள், நவீன் - 88381 30002, அரசூர், நீலம்பூர், மயிலம்பட்டி, இருகூர் பகுதி விவசாயிகள், சேகர் - 97865 77007 என்ற எண்களில் அலுவலர்களை தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை அறிந்து திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க....

தரிசு நிலங்களை வளப்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க வேண்டும்! சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு!

தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளின் எண்ணற்றப் பயன்கள்!

சிறு, குறு விவசாயிகள் வாடகையின்றி டிராக்டர் பயன்படுத்தலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

English Summary: Agricultural officials calls farmers to get benefit of Micro Irrigation Equipment at 100% Subsidy

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.