1. விவசாய தகவல்கள்

நெற்பயிரில் "ஆனைக் கொம்பன் ஈ" தாக்குதலா? இதோ கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit : Vikatan

நெற்பயிரில் ஆனைக் கொம்பன் தாக்குதல் தென்பட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளது.

சம்பா பருவத்தில் நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் அவ்வப்போது அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நெற்பயிரில் ஆனைக் கொம்பன் தாக்குதல் தென்பட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நடப்பு வருடம் சம்பா பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் மேகமூட்டமான வானிலை விட்டுவிட்டு பெய்யும் தூறல் மற்றும் அதிகபடியான ஈரப்பதத்தினாலும், தட்ப வெப்ப மாறுதல்களினாலும் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பாக நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் அதாவது தூர் வெடிக்கும் பருவத்தில் புழுக்களின் தாக்கம் அதிகம் இருக்கும்.

"ஆனைக் கொம்பன் ஈ" தாக்குதல் மற்றும் அறிகுறிகள்

 • இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 முதல் 21 நாட்களை கொண்டது.

 • இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும்.

 • இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ் சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைபோல் தோன்றும்.

 • பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றம் இருக்கும். தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் இடும்.

 • இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.

Elephant horn fly attack in paddy

Credit : Plantix

நெற்பயிர்களை பாதுகாக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 • நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

 • விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

 • ஆனைக் கொம்பன் நோய்க்கு எதிர்ப்பு திறனுடைய குறுகிய கால இரங்களான ஏடிடி-39, ஏடிடி-45, மத்திய கால இரகமான எம்டியு 3 ஆகியவற்றை நடவு செய்யலாம்.

 • பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங் களை பயன்படுத்த கூடாது.

 • பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும்.

 • ஆனைக் கொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித் தட்டான், குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

 • 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், ஒரு ஏக்கருக்கு கார்போசல்பான் 25% ஈ.சி 400 மி.லி. அல்லது பிப்ரோனில் 5% எஸ்.சி 500 கிராம் அல்லது குளோர்பைரி பாஸ் 20% ஈ.சி 500 மி.லி. அல்லது பாசலோன் 35% ஈ.சி 600 மி.லி. அல்லது தயோமீதாக்ஸம் 25% நனையும் குருணை-40 கிராம் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது பிப்ரோனில் 0.3% குருணை - 10 கிலோ அல்லது குயினைல்பாஸ் 5% குருணை 2 கிலோ இதில் ஏதாவது ஒரு குருணை மருந்தை தேவையான அளவு மணலுடன் கலந்து வயலில் இட்டு கட்டுப்படுத்தலாம்.

விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து பின்பற்றினால் நெற்பயிரில் ஆனைக் கொம்பன் தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் சாகுபடி செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

நெல் விவசாயிகளே உஷார்! - தழைச்சத்து உரங்களை அளவாக பயன்படுத்துங்கள்!

பூச்சித்தாக்குதலை தவிற்க... வரப்பில் பயறு வயலில் நெல் - ஐடியா தரும் வேளாண்துறை

English Summary: Agriculture officials explain how to control in case of elephant horn fly attack the paddy crops and steps to prevent pest attack

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.