வளி மண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வளிமண்டல சுழற்சி (Atmospheric circulation)
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தமிழக கடற்பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம்வரை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
03.10.2021
மிக கனமழை (Very heavy rain)
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
04.10.2021
மிக கனமழை (Very heavy rain)
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy rain)
அதேநேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழை பதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
டிரெண்டிங் மோகம் - ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து கொண்ட நபர்!
Share your comments