விவசாயிகளின் நலன்கருதி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்கு உயர்த்தும் திட்டம் மிக மிக முக்கியமானதாகும்.
தமிழக பட்ஜெட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு நடப்பாண்டில் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றான இந்த திட்டம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
5 ஆண்டுகளில், அனைத்து கிராமங்களிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நீர் ஆதாரங்களை பெருக்கி, சாகுபடி பரப்பினை உயர்த்தி, விவசாயி களின் வருமானத்தை மும்மடங்கு ஆக்கிட ஒன்றிய, மாநில அரசு திட்டங்களை ஒன்றிணைத்து ரூ.1245.45 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புறங்களில் தரிசாக உள்ள நில தொகுப்பை கண்டறிந்து, அந்த நிலத்தைப் பயிர் சாகுபடிக்குக் கொண்டுவர, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுத்தவிர முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியான நிலங்களில் சிறு தானியம் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களில் விதைகள், திரவ உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புன்செய் நிலத்தில் கோடை, உழவு செய்வதற்கு ஏக்கருக்கு 500 உழவு மானியமாக வழங்கப்படுகின்றன.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் செயல் விளக்கத்தில் அமைத்தல், உயிர் விளைச்சல் நெல் விதைகள், நுண்னூட்ட உரங்கள் 50 சத மானியத்தில் வழங்கப்படுகின்றன. இதேபோல் தேசிய நீடித்த நிலையான இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்தபட்டு வருகிறது.மேலேக் கூறிய அனைத்து திட்டங்களும் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டு இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டு வருகிறது.
இதேப்போன்று வேளாண் துறையின் சகோதர துறைகளின் செயல் பாடுகள் அனைத்தும் இந்த கிராமங்களில் உள்ள விவசாயி களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289.
மேலும் படிக்க...
Share your comments