1. விவசாய தகவல்கள்

ஐஸ்கிரீம் சுவை கொண்ட நீல நிற வாழைப்பழம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Daisy Rose Mary
Daisy Rose Mary
banana

மஞ்சள், பச்சை, செவ்வாழைகளுக்கு மத்தியில் புதியதொரு நீல நிற வாழை! ஐஸ்கிரீம் சுவையில் நீல நிறம் கொண்ட புதிய ரக வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பெயர் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் என்று அழைக்கப்படுகிறது.

வாழைப்பழங்கள் எப்போதுமே அதிக சத்துநிறைந்த ஆரோக்கியம் சார்ந்த பழமாக பார்க்கப்படுகிறது. ஏனவே தான் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பினரும் வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். வாழைப்பழத்தில் மோரிஸ், கற்பூரவள்ளி, பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, ஏலக்கி, மலைவாழை, செவ்வாழை என்று பல வகைகள் உள்ளன. இவை அனைத்திலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த வகை பழங்கள் நம் அனைவரும் அறிந்த்தே.

ப்ளூ ஜாவா - நீல நிற வாழை

ஆனால் சமீப காலமாக நீல நிறத்தில் காணப்படும் புதிய வகை வாழைப்பழமான ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. டிவிட்டர் பயன்பாட்டளர் ஒருவர் இது குறித்து சமீபத்தில் டிவீட் செய்துள்ளார். இது தற்போது வைலாகி வருகிறது.
இந்த பழங்கள் மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும். இந்த வகை வாழைப்பழங்கள் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வளர்க்கப்படுகின்றன. மிகவும் அரிதானவை, அவை எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை.

ப்ளூ ஜாவா வாழைப்பழங்களின் சிறப்புகள்

  • ப்ளூ ஜாவா வாழைப்பழங்களின் தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் காணப்படும்.

  • இது வெண்ணிலா ஐஸ்கிரீம்கிரீம் போன்ற சுவையுடன் மிருதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • இந்த வாழைப்பழங்கள் அதிக குளிர்ச்சியை தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடியவை.

  • ஹைபிரிட் செய்யப்பட்டிருந்தாலும் இந்த வாழைப்பழங்களில் மற்ற வகைகளைப் போலவே நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவை நிறைந்துள்ளன

  • இரும்பு, பாஸ்பரஸ், தியாமின் மற்றும் செலினியம் ஆகியவையும் அடங்கியுள்ளன. இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க...

சர்க்கரை நோயாளிகளுக்கு அட்டகாசமான டையட் லோ கிளைசெமிக்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

English Summary: All you know about Blue Java Bananas and its taste Like Ice Cream Published on: 09 April 2021, 01:31 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.