நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு கோரிக்கையின்பேரில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17%-லிருந்து 19%- மத்திய அரசு உயர்த்திருக்கிறது.
தொடரும் மழை
தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. தமிழக அரசின் இந்தக் கோரிக்கை தொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினா் தமிழகத்தில் அன்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.
கடிதம்
இந்நிலையில் விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உணவுத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சாா்பில் அண்மையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
19% ஈரப்பதம்
அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், 19 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லைக் கொள்முதல் செய்ய, வாணிபக் கழகத்திற்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், சற்று ஆறுதலையும் அளித்துள்ளது.
மேலும் படிக்க...
PM-kisan பயனாளிகள் பட்டியல் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!
மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.12,000!
Share your comments