வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சூரிய மின்வேலி, மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க பெரிதும் உறுதுணையாக இருப்பது சூரிய மின்வேலி. அவ்வாறு சூரிய மின்வேலி அமைக்க ஆகும் செலவில் ஒரு பகுதியை அரசு மானியமாக வழங்குகிறது. இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பெற்றுப் பயனடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு, விவசாய உற்பத்தியை பாதிக்காத வகையில் விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் (National Agricultural Development Program)
அதாவது சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியை ரூ.3 கோடி மானியத்துடன் கூடிய தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020-21-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
சூரிய ஒளி மின்வேலி அமைப்பதால் விலங்குகள், வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களிடம் இருந்து பயிர்களைப் பக்குவமாக பாதுகாக்க முடியும்.
மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியால் விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாது. அதன் மூலம் வருவாய் இழப்பில்லாமலும், விவசாயிகளுக்கு கிடைக்க வகை செய்யும்.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 1,245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்(Documents)
மேலும், சூரிய மின்வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.18 லட்சம் மானியம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனைத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதால், இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன், சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழக அரசு அனைத்து மாவட்ட விவசாயிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிதி ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதால் இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள அனைத்து வட்டார விவசாயிகள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேளாண்மை பொறியியல் துறை
செயற் பொறியாளர் அலுவலகம்
கோனூர் குஞ்சாண்டியூர்
குமாரசாமிப்பட்டி
சேலம்.
உதவி செயற் பொறியாளர் அலுவலகம்,
ஆத்தூர்.
உதவி செயற் பொறியாளர் அலுவலகம்,
காந்திநகர்.
உதவி செயற் பொறியாளர் அலுவலகம்
சங்ககிரி.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அஜினோமோட்டோ ஒரு Slow Killer - தெரியுமா உங்களுக்கு?
வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!
வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!
Share your comments