1. விவசாய தகவல்கள்

வீட்டு தோட்டம் அமைக்க விரும்புகிறீரா? இதோ உங்களுக்காகவே

KJ Staff
KJ Staff
Vegetables

வீட்டின் பின் புறத்தில் அல்லது வீட்டில் அதற்கென என தனி இடம் அமைத்து நம் அம்மாக்கள் தோட்டத்தை பராமரிப்பதை பார்த்திருப்போம். வீட்டில் தோட்டம் அமைப்பதால் அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் பல நாம் இன்றும் முறையாக அறியாததே. ரசாயனம் சேர்க்கப்படாமல் இயற்கை முறையில் வீட்டிலேயே பெறப்படும் இந்த முறையை கிச்சன் கார்டன் (Kitchen Garden) என்கிறோம்.

இந்த கிச்சன் கார்டெனில் நாம் செடிகள் துளசி, கற்பூரவல்லி, மணத்தக்காளி கீரை, சோற்று கற்றாழை, புதினா போன்றவற்றை மட்டும் வளர்க்காமல் காய்கறிகளையும் வளர்க்கலாம். எந்த ரசாயன ஊக்கிகளையும், பூச்சி கொல்லிகளையும் இடாமல் வீட்டில் பெறப்படும் சமையல் கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்ற இயற்கை பொருட்களை கொண்டே நன்கு தோட்டத்தை பராமரிக்கலாம். இதனால் உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது மற்றும் தோட்டத்திற்கு  நல்ல பராமரிப்பு இருந்தால் மட்டும் போதும்.

kitchen garden

வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் பயன்கள்

அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும்.

நச்சு மருந்துகள் இல்லாத பழம் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்.

காய்கறிகள் வாங்குவதற்கான செலவைக் குறைக்க முடிகின்றது.

வீட்டுக் காய்கறித் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளானது கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் சுவையாக இருக்கும்.

சமையலறையில் வீணாகும் நீர் மற்றும் பொருட்களை உபயோகமாக பயன்படுத்த முடிகின்றது.

உடலிற்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது.

பயிரிடும் பருவம்

ஜீன் - ஜீலை, செப்டம்பர் – அக்டோபர்

இடத் தேர்வு

வீட்டின் பின்புறம்

அதிக சூரிய ஒளி கிடைக்கும் வெட்ட வெளிப் பகுதி மற்றும் நீர் ஆதாரமுள்ள பகுதி, வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் அளவு மற்றும் வடிவமானது நிலத்தின் அளவு, வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் தோட்டத்தை சீராக பராமரிக்க ஆகும் கால அளவைப் பொறுத்தது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு, 5 சென்ட் (200 மீ2) இடமானது ஆண்டு முழுவதும் காய்கறிகள் கொடுக்க போதுமானது. செவ்வக வடிவ தோட்ட அமைவானது சதுர வடிவ (அ) நீள் பட்டை வடிவ தோட்டத்தை காட்டிலும் சிறந்ததாகும்.

வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் வரைபடம்

வேலி – கம்பிகளான வலை (அ) அகத்தி போன்ற உயிர்வேலி அமைத்தல்.

பல்லாண்டு பயிர்களான மா, சப்போட்டா, எலுமிச்சை, நெல்லி மற்றும் முருங்கை போன்றவற்றை தோட்டத்தின் ஓரப் பகுதிகளில் நிழலில் விழாத வகையில் நட வேண்டும்.

ஒன்று (அ) இரண்டு உரக் குழிகளை ஒரு ஓரத்தில் அமைக்க வேண்டும்.

வேலியின் நான்கு ஓரங்களிலும், சுரை, பாகல் மற்றும் புடலை போன்ற பயிர்களை படர விட வேண்டும்.

சில பயிர்களை (அமராந்தஸ், சுரை, பாகல் மற்றும் புடலை) நேரடியாக விதைத்தல்.

சில பயிர்களை (தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் வெங்காயம்) நேரடியாக விதைத்து நடுதல் வேண்டும்.

பயிரிடும் பரப்பை சமமாக பிரித்து, ஓராண்டு காய்கறிப் பயிர்களை பயிரிட வேண்டும்.

தொடர்ச்சியாக மற்றும் சிறப்பான பயிரிடுதலை வீட்டுக் காய்கறித் தோட்டத்தை அமைத்தல் சிறந்தது.

தேவையான அளவு அங்கக உரங்களை அடிக்கடி இட்டு மண்ணின் வளத்தை பாதுகாத்தல் சிறந்தது.

ஒவ்வொரு பாத்திக்கும் பார்சால் பாசனம் அமைத்தல் சிறந்தது.

தேவையான அளவு தேன் கூடு பெட்டிகளை அமைப்பதன் மூலம் போதுமான அளவு மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதுடன் தேன் கிடைக்கும்.

நல்ல பயிர் அறுவடை செய்து மகசூல் பெற வேதியியல் உரங்களை இடுதல் அவசியம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் புழுக்களை கைகளால் எடுத்து அழித்தல் மற்றும் வேப்பெண்ணெய் தெளிப்பு லிட்டருக்கு 4 மி.லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 3% என்ற அளவில் அளிக்க வேண்டும்.

நச்சு மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.

Kitchen Waste

பயிரிடும் முறைகள்:

பயிரின இடைவெளி

தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய்       :      60 x 60 செ.மீ

தட்டைபயறு       :      60 x 45 செ.மீ

பாகற்காய்         :      2 x 2 மீ

வெங்காயம்       :      15 x 10 செ.மீ

குச்சி கிழங்கு      :      60 x 60 செ.மீ

கிழங்கு               :      60 x 60 செ.மீ

முதன்மையாக பாத்தியில் நீர்ப்பாசனம் செய்யும் முன் நாற்றுகளை சரியான இடைவெளியில் நட்டு பின் மூன்றாவது நாள் உயிர் நீர் மறவாமல் அளிக்க வேண்டும்.

1 – 3 விதைகள் நேரடி விதைப்பில் பின்பற்றுவதுடன் போதுமான அளவு பாசனம் செய்வதுடன் 2 நாற்றுகள் விட்டு மீதமானவற்றை பிடுங்கிவிட வேண்டும்.

வீட்டு காய்கறித் தோட்ட மேலாண்மை

வேலியை ஒட்டிய பகுதியில் தாவரங்களை வளர்த்து படரவிட வேண்டும். சமையலறையில் வீணாகும் குப்பைகளை உரக்குழயில் இட்டு ஈரப்பதத்தை வைத்திருக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்

தேவையான போது நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

மட்கிய சமையலறை கழிவுகளை உரமாக மாற்றி எல்லா பயிருக்கும் இட வேண்டும். கலப்பு உரத்தை பயிருக்கு 5 கிராம் என்ற வீதம் நட்ட 30, 60 மற்றும் 90வது நாட்களில் இட வேண்டும்.

களையெடுத்தல்

தேவையானபோது களையெடுக்க வேண்டும்.

அறுவடை

பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் (அ) சிவப்பு நிறமாக காய்கள் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் புழுக்களை கைகளால் எடுத்து அழித்தல் மற்றும் வேப்பெண்ணெய் தெளிப்பு லிட்டருக்கு 4 மி.லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 3% என்ற அளவில் அளிக்க வேண்டும். நச்சு மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.

அங்கக முறை பயிர் பாதுகாப்பு

வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டை சாறு, பஞ்சகாவ்யா 

உபகரணங்கள்

மண் வெட்டி

களைக் கொத்து

கைத்தெளிப்பான்

பூவாளி

வெட்டுக் கத்தரி

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Are Planning for a Kitchen Garden: Here Are some ideas and Guidance to Start a kitchen garden Published on: 28 September 2019, 03:49 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.