திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்குச் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கயம் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் எஸ்.முத்துகுமார் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி (Cassava cultivation)
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டாரத்தில் உள்ள நத்தக்காடையூர், குட்டப்பாளையம், பழையக் கோட்டை, மருதுறை, முள்ளிப்புரம், நால்ரோடு போன்ற வருவாய் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மரவள்ளிக் கிழங்கு சாகுபடி விவசாயிகள், தோட்டக்லைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது.
100சதவீதம் மானியம் (100 percent subsidy)
இதன்படி மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனக் கருவிகளுக்கு 100சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
இப்பகுதி மரவள்ளிக் கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒரு ஏக்கருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.42,781 வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.
சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளுக்காக ஜி.எஸ்.டி வரியை அரசே ஏற்றுக்கொள்ளும்.
மேலும் விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடிவு பெற்றிருந்தால், மீண்டும் அரசு மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு (Contact)
கூடுதல் விபரங்களுக்கு வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநரை 9942949505 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!
121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!
Share your comments