1. விவசாய தகவல்கள்

நீங்கள் சிறு, குறு விவசாயியா?- சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் அரசு மானியம் பெற்று நுண்ணீர்பாசனத்தில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆவணங்கள் அவசியம் (Documentation required)

பொதுவாக விவசாயத்திற்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பெற, சிட்டா, அடங்கல், குறு மற்றும் சிறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் இவ்வாறு பல ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

விவசாயி சான்றிதழ் (Farmer Certificate)

இந்த ஆவணங்களில் மிகவும் இன்றியமையாதது எதுவென்றால், விவசாயி என்பதற்கான சான்றிதழ்தான்.

தீவிர முயற்சி

இந்த சான்றிதழை விவசாயிகள் சிரமமின்றிப் பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகவும், மகசூலை 3 மடங்காக பெருக்க உதவும் வகையிலும் வேளாண் மற்றும், உழவர் நலத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

முன்னோடித் திட்டங்கள் (Pioneer projects)

இதற்காக பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் வருகிறது.
அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களில், பிரதமரின் நுண்ணீர் பாசனதிட்டம் முக்கியமாகும். சொட்டுநீர், தெளிப்புநீர், ஆகியவற்றிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

சான்றிதழ் முகாம் (Certification Camp)

  • இத்திட்டத்தில் இவ்வாண்டு அதிக விவசாயிகள் பயன்பெற உதவுவதற்காக சான்றிதழ் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ஆகஸ்ட் 10ம் தேதி வரை அனைத்து தாலுகாக்களிலும் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வேளாண்துறை அலுவலர் இணைந்து சிறப்பு முகாம் நடக்கிறது.

  • இம்முகாமில் அடங்கல் மற்றும் நில வரைபடங்களையும் பெற்றுகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்

டாம்.பி.சைலஸ்

வேளாண் இணை இயக்குநர்

மேலும் படிக்க...

பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Are you a small, marginal farmer? - Special camp to issue certificates! Published on: 04 August 2021, 08:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.