வேளாண் தொழில் முனைவோர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி அளிக்கப்படுவதாகக் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேளாண் கடன் (Agricultural credit)
வேளாண் சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்க மத்திய - மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கடன் வழங்கப்படுகிறது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோருக்குக் கடன் வழங்கப்படவுள்ளது.
மின்சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருள் மதிப்பீட்டு அலகு, தரம் பிரிப்பு, குளிர் பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு இந்தக் கடனுதவி கிடைக்கும்.
யாருக்குக் கடன் (To whom credit)
-
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள்
-
கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
-
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்
-
சுயஉதவிக் குழுக்கள்
-
தனிப்பட்ட விவசாயிகள்
-
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்புக்குழு
-
மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சிஅமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உள்கட்டமைப்புகள்
மேலே கூறிய அனைத்து பிரிவுகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படும்.
எவ்வளவு கடன்? (How much debt?)
இத்திட்டத்தில், அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு மற்றும் குறு விவசாய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்தரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் உண்டு.
தொடர்பு கொள்ள (contact)
எனவே, கடன்பெற விரும்புவோர் அவரவர் பகுதியிலுள்ள தேசியமயமாக்கப் பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விவசாயம்: ரூ. 5 லட்சத்தில் டாப் 10 டிராக்டர்கள்! முழு விவரம்
Share your comments