1. விவசாய தகவல்கள்

வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Banana prices will remain stable this year as usual - TNAU's forecast!
Credit : Mathrubhumi


வாழைக்கு இந்த ஆண்டு நிலையான விலை கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய ரகங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ஈரோடு, தேனி, தூத்துக்குடி, கடல், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.  பூவன் இரகமானது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இலை நோக்கத்திற்காகவும் பயிர் செய்யப்படுகிறது.

தற்போது, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி சந்தைக்கு, தஞ்சாவூர், பெரம்பலூர் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் வருகிறது. நேந்திரன் வரத்தானது மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து வருகிறது. வரும் மாதங்களில் வாழைக்கான தேவை நிலையானதாக இருக்கும்

ஆய்வு (Research)

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலைகளைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவின் அடிப்படையில், நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை கற்பூரவள்ளிக்கு ரூ.20 வரையும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு  ரூ.30 வரையும் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பருவமழை மற்றும் வரும் விழாக்காலம் எதிர்கால விலையை உறுதி செய்யும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் அடிப்படையில் விவசாயிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு

மேலாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயமுத்தூர் 641 003 என்ற முகவரியிலும்

04222431405 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க...

மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!

பாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Banana prices will remain stable this year as usual - TNAU's forecast! Published on: 28 September 2020, 11:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.